பாஜகவை எதிர்கொள்ள பசுமூத்திர தொழிற்சாலை-காங் வாக்குறுதி -நலங்கிள்ளி!

அமித்ஷா தன் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் – இர்பான் ஹபீப்!

உலக மீனவர் தினம் – போலீசார் போட்ட விதிமுறைகள் இவை!

பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? -ஸ்டாலின்

பாலியல் பலாத்காரம் சிறுமி கொலை-லஞ்சம் பெற்று தப்ப விட்ட போலீஸ்!

நானும் கொஞ்ச நாளாய் முகநூலில் பார்க்கிறேன். காங்கிரசை எதிர்த்தாலே அது இந்துத்துவ ஆதரவு எனக் குதிக்கத் தொடங்குகிறார்கள் நம்மூர் திராவிட ஆதரவாளர்களும், பாரத பக்தர்களும். அதுவும் கர்னாடக இடைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றியை ஏதோ இவர்களே வென்றது போல் கொண்டாடினார்கள். அதுவும் ஐயப்பன் பாஜகவைத் தண்டித்து விட்டதாகப் பதிவுகள் வேறு. அவனுக எல்லாமே நம் காவேரியைக் களவாடிய திருடர்கள்தானே என்றால், இல்லை, காங்கிரஸ்காரன் இந்தத்துவத்துக்கு எதிரி என்றனர். அதாவது இவர்களுக்குத் தமிழனின் காவிரி உரிமை கூட முக்கியம் இல்லையாம், இந்தியாவில் இந்துத்துவம் வந்து விடக் கூடாதாம். ஆகா, என்னே இவர்களின் மதச் சார்பின்மை உணர்வு என நொந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.

இன்று மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 2018 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளிவந்து விட்டது. அந்த அறிக்கையில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைப் பாருங்கள்.

• எங்களின் ஆட்சியில் இந்து ஆன்மிகத் துறை எனத் தனியாகத் தொடங்குவோம். அந்தத் துறையின் கண்காணிப்பில் பசுவைப் போற்றுவோம். எடுத்துக்காட்டாக,

1. பசு மூத்திரத் தொழிற்சாலை ஆரம்பிப்போம்.

2. பசுஞ்சாணத் தொழிற்சாலை ஆரம்பிப்போம்.

3. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும்
கோசாலை ஆரம்பிப்போம்.

4. நெடுஞ்சாலைகளில் அடிபடும் பசு மாடுகளுக்கு
சிகிச்சை அளிப்பதற்கு என்று மருத்துவ மையங்கள்
அமைப்போம்.

5. இறந்து போன பசுக்களுக்கு இறுதிச் சடங்குகள்
செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்து
கொடுப்போம்.

6. பசுக் கொலைத் தடுப்புச் சட்டம் கொண்டு
வருவோம். ஏனென்றால் பசு எங்களின் புனித
விலங்கு.

7. சமஸ்கிருதம் வளர்ப்பதற்கென மாநிலம் முழுதும்
பள்ளிக் கூடங்கள் திறப்போம்.

8. கோயில்களிலும் மடங்களிலும் குரு-சிஷ்ய
பரம்பரை முறையும், அதனடிப்படையில் வாரிசு
உரிமையும் கொண்டு வருவோம்.

9. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவருவது பற்றி
மறுசிந்தனை செய்வோம்.

10. ராமர் நடைப் பயணப் பாதை என்கிற அந்தப்
புராணப் பாதை கண்டறியப்பட்டு, அந்தப்
பாதை புனிதப் பாதையாகக் கட்டமைக்
கப்படும்.

சரி, அதென்ன ராமர் நடைப் பயணம். அதாவது இராம பிரான் தந்தைக்கு வாக்களித்தபடி வன வாசம் இருந்த போது, மத்திய பிரதேசம் வழியாக நடந்து சென்றாராம். அந்தப் பாதையைத்தான் ராமர் நடைப் பயணப் பாதை என்கின்றனர். இதில் இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு ராமர் பாதையைக் கட்டமைப்பதாகச் சொல்லி பாஜக நீண்ட நாட்களாக மத்திய பிரதேச மக்களை ஏமாற்றி வருகிறதாம். அதனை இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தரப் போகிறதாம். இதனை இப்போதுதான் காங்கிரஸ் சொல்வதாக யாரும் நினைத்து விட வேண்டாம். இதற்கென காங்கிரஸ் கட்சியினர் இராமர் நடந்து சென்றதாக நம்பப்படுகிற அந்தப் பாதையில் ஒரு புனித நடைப் பயணத்தையும் மேற்கொண்டனர். இந்த 19 நாள் புனிதப் பயணம் 2018 செப்டம்பர் 21 முதல் சாட்னா, ரேவா, பன்னா மாவட்டங்களின் 39 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக நடைபெற்றது. இந்த வகையில் பாஜகவே காட்டாத ராம பக்தியை இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் காட்டுகிறதாம். அவ்வளவு பக்தி, அவ்வளவு கொள்கை.

இந்தப் பசு அரசியலை மத்திய பிரதேச காங்கிரஸ் இப்போதுதான் எடுப்பதாக நினைத்து விட வேண்டாம். அதிலும் காங்கிரஸ் பாஜகவை விஞ்சி நிற்கிறது. திக் விஜய சிங் மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த போது வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார். மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக் கொலைத் தடைக்குச் சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று வேண்டினார்.

பாபர் மசூதியில் இராமர் சிலையை உள்ளே அனுமதிக்க வைத்தது காங்கிரஸ் கட்சி, அதை வைத்து அந்தக் கோயியில் வழிபாட்டுக்கு அனுமதித்தது காங்கிரஸ் கட்சி, உடையும் மசூதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. தில்லி வீதிகளில் அப்பாவி பஞ்சாபியர்களை ஓட ஓட வெட்டிக் கொன்றது காங்கிரஸ் கட்சி. காஷ்மீரில், தெலங்கானாவில், நாகாவில் என குருதி ஆறு ஓட விட்டது காங்கிரஸ் கட்சி. 1965இல் தமிழ்நாட்டிலும், 2009இல் தமிழீழத்திலும் குருதி ஆறு ஓட விட்டது காங்கிரஸ் கட்சி.

பாஜகவோடு இந்துத்துவத்தில் சளைக்காது போட்டியிடும் காங்கிரசைத்தான் திகவினர், திமுகவினர், பாரதீய இடதுசாரிகள் மதச்சார்பின்மையில் ஊறிப் பிறந்த கட்சி போல் நமக்குப் படம் காட்டுகின்றனர். ராகுல் தலைமை ஏற்று மதச்சார்பின்மை காப்பாதாகச் சொல்கிறார் தோழர் திருமா. இவர்கள் சிறு கர்னாடக வெற்றிக்கே பெரும் கொண்டாட்டம் நடத்துகிறார்கள், கொண்டாட மறுக்கும் நம்மையும் இந்த காங்கிரஸ் சேற்றில் விழச் சொல்கின்றனர்.

இவர்களுக்கு ஒன்று சொல்வோம், இந்துத்துவ அரசியலுக்கு பால பாடமே தமிழ்த் தேசியக் கல்விதான். தமிழ்த் தேசியர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள், எது இந்துத்துவம், எது மதச்சார்பின்மை என்று.

#2019_நாடாளுமன்ற_தேர்தல் #பாஜக_காங்கிரஸ் #மோடி_சர்கார்

 

விஷம் கொடுத்து ஜெயலலிதாவைக் கொன்று விட்டார்கள் -திண்டுக்கல் சீனிவாசன்!

இலங்கை ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கக் கூடாது மத்திய அரசு -ஸ்டாலின் விமர்சனம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*