பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

நிர்மலா தேவி வாக்குமூலமும் ரகசிய விசாரணையும்?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ம.நாடராசனின் நிலை!

பாஜகவை வீழ்த்த நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.அதில் திமுக இணைய வேண்டும் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதை வழிமொழிந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. பல தலைவர்களைச் சந்தித்து பேசியவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து பேசினார். பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு “பாஜகவை வீழ்த்துவதே எங்களின் நோக்கம். அதற்கான சந்திப்பாகத்தான் இது நடந்தது. பாஜகவுக்கு எதிராக கட்சிகளை இணைத்து பொது தளத்தை உருவாக்க இருக்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைய வேண்டும், எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடமும் வலியுறுத்த உள்ளேன்” என்றார் சந்திரபாபு நாயுடு.
இது இந்திய அளவில் முக்கியத்துவம் உள்ள சந்திப்பாக கருதப்பட்ட நிலையில், தேசத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் கருத்தை வழிமொழிவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்டாலின்
“தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்!மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்! “என்று தெரிவித்துள்ளார்.
மேலும் , ஒரு டுவிட்டர் பதிவில்:-
“காங்கிரஸ் தலைவர் திரு @RahulGandhi அவர்களை ஆந்திர மாநில முதல்வர் @ncbn சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!”என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக இந்திய அளவில் கட்சிகள் ஒருங்கிணைவதில் ஸ்டாலினின் இந்தக் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.
#DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance #திமுக_தலைவர்ஸ்டாலின் #திமுக_காங்கிரஸ்_கூட்டணி

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*