“பிரதமர் மோடி ஒரு அனகோண்டா” -ஆந்திர அமைச்சர் விமர்சனம்!

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

#நிர்மலாதேவி விவகாரம் -“யாரோ சிலரை காப்பாற்றுகிறார்கள்” -பேரா. மனைவி குற்றச்சாட்டு!

அரசு இந்தியரத்திற்கும் மத்திய அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் போக்கு பல்வேறு விஷயங்களில் வெளிப்பட்டு வருகிறது. சி.பி.ஐ இயக்குநரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவாவ்க்கும் இடையே பனிப்போர் நிலவிய நிலையில் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. ஆனால், பனிப்போர் என்று வெளியில் சொன்னாலும் உண்மையில் ரஃபேல் போர் விமான ஆவணங்களை சி.பி.ஐ இயக்குநர் ஆய்வு செய்த காரணத்தால்தான் பிரதமர் மோடி நள்ளிரவில் அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பினார் என்று காங்கிரஸ் குற்றம் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியை பலவீனமாக்க அரசு முயல்கிறது என ரிசர்வ் வங்கி இயக்குநர்களே குற்றம் சுமத்திய நிலையில், பிரதமர் மோடியை அனகோண்டா என்று ஆந்திர மாநில மந்திரி யனமாலா ராமகிருஷ்ணடு விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்:-
“பிரதமர் மோடியை விட பெரிய அனகோண்டா வேறு யாராக இருக்க முடியும். அவரே அனைத்து அமைப்புகளையும் விழுங்கும் அனகோண்டா. சிபிஐ. ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளையே அவர் விழுங்குகிறார்” என்று கூறியுள்ளார் இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

#Tamil_seithigal #Tamil_news #Tamilnadu_current_news #tn_political_news, #modi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*