போர்ஃபர்ஸ் ஊழலை தூசு தட்டிய பாஜக -நிராகரித்த உச்சநீதிமன்றம்!

மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு போர்ஃபர்ஸ் விமான பேர வழக்கில் மேல் முறையீடு செய்த சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரஃபேல் போர் விமான பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகளை திசை திருப்ப பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவி வருகிறது.
1986-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது ஸ்வீடன் நாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவனத்திடம் ஆயுதம் வாங்க அப்போதைய காங்கிரஸ் அரசு 1,437 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், 64 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.இதையடுத்து போர்ஃபர்ஸ் ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. 15 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்தது. இந்த வழக்கு முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்தது சிபிஐ.
பிரான்ஸ் நிறுவனமான டஸால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,இந்த வழக்கை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் ஏற்படுத்தலாம் என பாஜக நினைத்த நிலையில். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிபதிகள் ஆர்.பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்ததால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

#ரபேல்_ஊழல் #போர்பஸ்_விமான_ஊழல் #காங்கிரஸ் #சிவசேனா #பாஜக #nirmalasitharaman #RafaleScamGrandExpose #RafaleScam #ரஃபேல்-ஊழல்,

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*