மீட்புப்பணிகள் மோசம் -ஸ்டாலின்!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

கஜா புயல் வீசிய மறு நாளே சென்னையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் கிளம்பிச் சென்றார். பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் குறிப்பு:-
“நேற்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை! ‬இதனை பார்வையிட தமிழக முதலமைச்சருக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை.

மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற பணியை அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்தப் புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

#ockhi_cyclone #Gaja_Cyclone #Cyclone_Ockhi #ஓக்கி_புயல்_மீனவர்_மரணம் #கஜா_புயல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*