முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி!

மீட்புப்பணிகள் மோசம் -ஸ்டாலின்!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

11 வயதே ஆன சிறுமி ஒருவர் வயதுக்கு வந்த நிலையில், கோரப்புயல் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் அச்சிறுமியை தனிமைப்படுத்தி தென்னந்தோப்பிற்குள் ஒரு குடிசையில் தனிமைப்படுத்தி வைத்த நிலையில், மரம் விழுந்து அச்சிறுமி பலியான சோகம் அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது.

படித்தவர் முதல் பாமரர் வரை, நகரம் முதல் குக்கிராமங்கள் வரை சடங்கு சம்பிரதாயங்களின் பெயரால் கடைபிடிக்கப்படும் சில பழக்கவழக்கங்கள் சில பிஞ்சுகளின் உயிர்களையும் பலி கொண்டு விடுகிறது. வயதுக்கு வந்த பெண்கள் தங்களுக்கு இயற்கையாக வரும் பீரியட்ஸ் நாட்களில் வீட்டிற்குள் செல்லக் கூடாது, குறிப்பாக சமையலறை, சாமி அறைகளுக்குள் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் கிராமங்களில் மட்டுமல்ல மத்தியதர வர்க்க குடும்பங்களில் கூட உள்ள நடைமுறை ஆகும்.

படித்த உயர்சாதிப் பெண்களே மாதவிடாய் நாட்களில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதே போன்ற ஒரு கொடுமையில்  சிக்கி கஜா புயலுக்கு பலியாகி இருக்கிறார் சிறுமி ஒருவர்.

பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி  பருவம் எய்திருக்கிறார். உடனே அவரது வீட்டால் மரபுப்படி முதல் தீட்டு என்பதால் அவரை வீட்டை விட்டு விலக்கி தென்னந்தோப்புக்குள் தனி குடிசை போட்டு தங்க வைத்திருக்கிறார்கள். கஜா புயலுக்கு அரசு விடுத்த முன்னெச்சரிக்கைகள் எதுவும் அந்த ஏழைகளுக்கு புரியவும் இல்லை. புரிந்து கொண்டு சிறுமியை வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள சம்பிரதாயம் அனுமதிக்கவும் இல்லை.

இரவு வீசிய கொடிய புயலில் அழுது அரற்றிய அந்த சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. கடைசியில் அந்த சிறுமி இருந்த ஓலைக்குடிசை மீது மரம் விழுந்து நசுங்கி இறந்து விட்டார் அந்த சிறுமி. அவர் இறந்த பின்னர் வயதான முதிய பெண்கள் அழுது அந்த சிறுமியை புதைத்து விட்டார்கள்.

மூடநம்பிக்கையும், சம்பிரதாயத்தின் பெயரால் நடக்கும் இது போன்ற செயல்களும் இன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்கப் போகிறத

#ockhi_cyclone #Gaja_Cyclone #Cyclone_Ockhi #ஓக்கி_புயல்_மீனவர்_மரணம் #கஜா_புயல் #Pattkottai_gaja #Anaikkadu_dead #periods #periods_dead #Anaikkadu_periods_dead

 

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*