’மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு ‘சர்கார்’ படத்திற்கு இல்லாமல் போனது ஏன்?

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!
“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

‘சர்கார்’ படத்தில் அதிமுக ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகள் நீக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் மெர்சல் படத்தில் கம்பீரமாக நின்ற விஜய். சர்கார் படத்தில் சரணடைந்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு அரசியல் ரீதியாக அவருக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகவும் இது பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படம் வெளியான போது பாஜகவினர் அந்த படத்தை எதிர்த்தனர். பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா ஜோசப் விஜய் என்ற பெயரைப் போட்டு நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பது போன்றும் பிரச்சாரம் செய்ய தமிழ் மக்களும் முற்போக்காளர்களும் நடிகர் விஜயை கொண்டாடினார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் மெர்சல் படத்திற்கு ஆதரவை வழங்க இந்திய அளவில் மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.

குறிப்பாக, மெர்சல் படத்தில் பாஜக நீக்க வேண்டும் என்று கூறிய எந்த வசனங்களும் நீக்கப்படவும் இல்லை. மெர்சல் எப்படி சென்சார் ஆனதோ அப்படியே ஓடி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அதே படம் ஆந்திராவில் சில வசனங்களை நீக்கி வெளியானது தனிக்கதை என்றாலும் தமிழகத்தில் பாஜகவினர் உருவாக்கிய எதிர்ப்பை விஜய் சாமாளிக்க தமிழகத்தில் உருவான பேராதரவு ஒரு காரணமாக இருந்தது. அதற்கு விஜய் நன்றியும் தெரிவித்தார்.

ஆனால், ‘சர்கார் ‘ படத்தை அதில் வரும் சில வசனங்களுக்காகவும், கோமளவல்லி என்ற கேரக்டருக்காவும் அதிமுகவினர் எதிர்க்கிறார்கள் என்பது நாம் தெரிந்த செய்தி. ஆனால், அதிமுகவினர் மட்டும்தான் எதிர்க்கிறார்களா என்றால். இல்லை தமிழகத்தில் அரசியல் உணர்வுள்ள, இடஒதுக்கீடு, சமூகநீதி, உள்ளிட்ட தமிழகத்தின் உயிர்நாடியான கொள்கைகளில் அடிப்படை புரிதல் உள்ள பெரும்பலானவர்கள் சர்காரை விமர்சிக்கிறார்கள்.

கடந்த படத்தில் பாஜகவை விமர்சித்த நடிகர் இந்த சர்கார் படத்தில் பாஜக ஆட்சி பற்றி மவுனம் காக்கிறார். உயர்சாதியினர் பேசும் இலவசம் வேண்டாம் என்னும் அரசியலை சர்காரில் பேசுகிறார். அதுவே அந்த படத்தின் வீழ்ச்சிக்கு பெரும் காரணம்.

இலவசங்கள் என்பது சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசு வழங்கும் சலுகை. எப்படி சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ அப்படியான ஒன்றுதான். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகம் ஓரளவுக்கு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு இங்குள்ள ரேஷன் சிஸ்டமும், இடஒதுக்கீடும், இலவச திட்டங்களுமே காரணம். அதை வேண்டாம் என்று சொல்ல சினிமாவில் கோடிகளில் புரள்கிறவர்களுக்கு உரிமை இல்லை.

நடிகர் விஜயின் ரசிகர்களில் 99% பேர் அரசுப்பள்ளிகளில் இலவசக் கல்வி பெறுகிறவர்கள். அரசு கொடுக்கும் இலவச திட்டங்களில் வாழும் ஏழைகள் என்னும் நிலையில் இலவசங்களை விமர்சிக்கிறேன் என்று அந்த திட்டங்களை இழிவு படுத்தி படம் எடுத்து சர்கார் சிக்கலில் சிக்கியுள்ளது.

மிக முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது பாஜக எதிர்த்த ‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு ‘சர்கார்’ படத்திற்கு கிடைக்கவில்லை. இதைத்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளுவது என்பார்களோ?

#sarkar #komalavalli #jayalitha #ஜெயலலிதா #கோமளவல்லி ##SarkarDiwali #SarkarStoryTheft #சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar # vijay_sarkar

நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் -சந்திரபாபு நாயுடு!

ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*