மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

தோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்! #உடல்நலம்#skin_diseases

மே-1 ஆம் நாளை உலகம் முழுக்க தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே திருவிழா நாள் மே 1-தான் என்னும் நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மே 1-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவித்து அது நடைமுறையில் இருந்து வரும் நிலையில், திரிபுரா மாநிலத்தில் மே-1 ஆம் தேதி தொழிலாளர் தினத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை திரிபுரா பாஜக அரசு ரத்து செய்துள்ளது.

சமீபத்தில்தான் மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து திரிபுரா மாநிலத்தை பாஜக கைப்பற்றியது. அது நாள் முதல் கம்யூனிஸ்ட் அடையாளங்களை அழித்து வருகிறது. தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்திருக்கும் பாஜக அரசின் நடவடிக்கை திரிபுராவில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை மாநில அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Tripura #MayDay

அரசு விடுமுறையில் இருந்து உழைப்பாளர் தினத்தை நீக்கிய பாஜக அரசு – எதிர்க்கட்சிகள் கண்டனம்
அகர்தலா:

சர்வதேச அளவில் உழைப்பாளர் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் பாஜக அரசு உழைப்பாளர் தினத்தை மாநில பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஆளும் பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பாஜக தொழிலாளர்களை எப்படி பார்க்கிறது என புரிந்துகொள்ள முடியும் எனவும் திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை மந்திரி மனிக் டே கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக இந்தியாவின் எந்த மாநிலமும் மே தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக கேள்விப்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripura #MayDay #மே_நாள் #தொழிலாளர்_தினம் #May_day #May_1

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*