“மோடிதான் பலசாலி” – ரஜினி சான்றிதழ்!

ஆரியத்தை கதிகலங்கவைத்த அண்ணாவின் நீதிதேவன் நாடகத்திருந்து ஒரு காட்சி – ஆழி.செந்தில்நாதன்!

‘கஜா’ கடும் புயலாக இருக்கலாம் -எச்சரிக்கை!

அமித்ஷா தன் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் – இர்பான் ஹபீப்!

நேற்று சர்சைக்குரிய வகையில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நேற்று பேசியவைகளுக்கு விளக்கம் கொடுத்தார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் “ ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பது போல சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள். அந்த ஏழு பேரையும் தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல.பத்திரிகையாளர்கள் என்னிடம் மொட்டையாக “அந்த ஏழுபேர் “ என்று கேட்டதால் நான் பதிலுக்கு “எந்த ஏழு பேர் “ என்று கேட்டேன்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழுபேர் என்று கேட்டிருந்தால் தெளிவாக பதில் சொல்லியிருப்பேன்.

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைப்பதால் அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி. என்றுதான் சொன்னேன். ஒருவரை 10 சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால், உண்மையான பலசாலி யார்?மோடிதான் பலசாலி. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன்” என்றார்.

#Rajinikanth #Super_Star_Rajini #ரஜினிகாந்த் #அரசியலில்_ரஜினி

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*