மோடியை பாராட்டும் உலக வங்கி தலைவர்!

New York : Prime Minister Narendra Modi with World Bank President Jim Yong Kim in a meeting in New York on Friday. PTI Photo by Subhav Shukla (PTI9_25_2015_000285A)

பிரதமர் மோடியின் நான்காண்டுகால ஆட்சியில் எளிதில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 65 புள்ளிகள் பெற்று இந்தியா முன்னேறியிருப்பதாக உலக வங்கி தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில் மோடி அரசுக்கு இணையாக இதுவரை இருந்த இந்திய அரசுகள் எதுவும் செயல்படாத அளவுக்கு மோடி செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழிலதிபர்கள் கடும் நட்டங்களை சந்தித்துள்ளார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், அந்நியமுதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா முன்னேறியுள்ளதாக இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தியா உலக அளவில் 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி 2016-ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் 130 -வது இடத்திற்கு முன்னேறியது. படிபடியாக முன்னேறி 2017-ஆம் ஆண்டு 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 31-10-2018 அன்று உலக வங்கி வெளியிட்ட இந்த (2018) ஆண்டிற்கான எளிதாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா அந்நியமுதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.எளிதாக தொழில் துவங்குவதற்கான சூழல் இந்தியாவில் உள்ளதாக உலக வங்கி மோடியை பாராட்டியுள்ளது.உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். குறுகிய காலத்தில் இந்த மிகப்பெரிய சாதனையை செய்ததற்காக பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

#word_Bank #Corporate_Bussiness #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim

மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*