ரகசியமாக திட்டமிட்டு தருமபுரி குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு!

தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்?

#Gaja_cyclone பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் எடப்பாடி எஸ்கேப் ஆவது ஏன்?
ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்!

பிளஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், தருமபுரி பேருந்திற்கு அதிமுகவினர் தீவைத்தனர். இதில் மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் மூவர் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் இருந்த நிலையில் , இவர்களை விடுவிக்க அதிமுக அரசு தீர்மானித்து ஆளுநருக்கு இவர்களை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்தது. ஒரு முறையல்ல மூன்று முறை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதோடு ரகசியமாக இவர்களை விடுவிக்க ஆளுநர் மாளிகையோடு சேர்ந்து தமிழக அரசு திட்டமிட்டு காய் நகர்த்தியதும் இப்போது அம்பலமாகி இருக்கிறது.
அதாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் “161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம்” என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை பயன்படுதித்தான் இப்போது தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் கைதிகளான அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 161 -வது உரிமையை உறுதிப்படுத்தி பெற்றுக் கொடுத்த பேரறிவாளன் உள்ளிட்டோரை மொத்தமாக ஏமாற்றியிருக்கிறது தமிழக அரசு.
தருமபுரி குற்றவாளிகளை விடுவிப்பதில் தீவிரமாக இருந்த எடப்பாடி பழனிசாமி மூன்று முறை ஆளுநருக்கு கோரிக்கை வைத்து விடுதலைக்கு ஒப்புதலும் பெற்றது. அத்தோடு இவர்கள் விடுதலையாகும் விஷயத்தை ரகசியமாக வைத்து அவர்கள் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்று சேர்ந்த பின்னர்தான் தகவலை வெளியில் கசிய விட்டது. அதுவரை சிறையில் இருக்கும் மற்ற கைதிகளுக்குக் கூட இந்த விஷயம் தெரியாமல் பரம ரகசியமாக வைத்திருந்தது. இவர்கள் மூவரையும் ஆளுநர் விடுதலை செய்தது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆளுநர் இவர்களை விடுவித்ததும். அடுத்த சில மணி நேரங்களில் அது வேலூர் சிறைச்சாலைக்கு தெரிவிக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் வீடுகளுக்குச் சென்ற பின்னரே சிறைத்துறை ஊடகங்களுக்கு இந்த தகவலைச் சொல்லியிருக்கிறது.மொத்தத்தில், 161-வது கன கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு 27 ஆண்டுகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை கோரும் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதிப்பது தொடர்பாக மவுனம் சாதிக்கிறது. மூன்று முறை கடிதம் எழுதி அதிமுகவினரை விடுவித்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

#Pleasan_Stay_Hotel #Jalalitha_Case #Jayalalitha_fir #பிளஸ்ட்ண்ஸ்டே #தருமபுரி_பேருந்து_எரிப்பு #தருமபுரி_அதிமுகவினர் #Panwarilal_purohith

“முதலமைச்சருக்கு இருப்பது இருதயமா? இரும்பா?”

கஜா புயல் நிவாரணம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

தினத்தந்தி நாளிதழை தீயிட்டு எரித்த செம்போடை கிராம மக்கள்-படங்கள்!

 

முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*