ராஜபக்சே தோல்வி -வென்றார் ரணில்!

திமுகவை விரும்பும் காங் -தேசிய அளவில் முக்கியத்தும பெறும் திமுக!

இலங்கையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்தது. அதில் பெரும்பான்மை பெற முடியாமல் ராஜபக்சே தோல்வியடைந்துள்ளார்.
அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் இருந்த நிலையில்,ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் இடையில் மோதல் உருவானது. அதிபர் சிறிசேனா திடீரென ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதனால் ரணில் பதவியிழக்கும் சூழல் உருவானது. ஆனால், ராஜபக்சே தன் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் இல்லை என்பதால் சிறிசேனா நாடாளுமன்றத்தை முடக்கினார். பின்னர் நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு போதுமான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்தார். ஆனால், பெரும்பாலான கட்சிகள் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாட நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைத்ததை ரத்து செய்தது.
இந்நிலையில், சபாநாயகர் கரு.ஜெயசூர்யா நாடாளுமன்றத்தை இன்று கூட்டினார். ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இன்று காலை நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது பெரும் குழப்பம் நிலவியதை அடுத்து. ராஜபக்சே அவையை விட்டு வெளியேறினார்.
பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வென்றதாக கரு.ஜெயசூர்யா அறிவித்தார்.
#Rajapakshe_Fail #srilanka_politics #Rajapakshe #Mahinda_Rajapaksa #Srilanka_Politics #Eelam #Tamil_Eelam #sirisena #ranilwickremesinghe #srilankaparliament #EELAM_TAMILS #ஈழத்தமிழர்கள் #இலங்கைதமிழர்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*