ராமருக்கு பிரமாண்ட சிலை உ.பி அரசு விரைவில் அறிவிப்பு!

மோடியை பாராட்டும் உலக வங்கி தலைவர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் சரயு நதிக்கரையோரத்தில் கடவுள் ராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கும் முடிவை தீபாவளி அன்று உ.பி அரசு அறிவிக்க இருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி பாபர் மசூதியை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இடித்து தகர்த்தன. அந்நிகழ்வு இந்திய வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்டது. அதுவரை இந்து- முஸ்லீம் மோதல்கள் நாட்டில் இருந்தாலும் சிறுபான்மை சமூகங்களுக்கும், பெரும்பான்மை சமூகங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கிய அந்நிகழ்வு பல்வேறு கலவரங்களுக்கும் வழி வகுத்ததோடு. இன்றளவும் ராமர் கோவிலை பிரதான தேர்தல் கோஷமாக பாஜக முன் வைத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், ராமர்கோவில் கட்டுவோம் என்று பாஜக பேசத்துவங்கியிருக்கிறது.
ஆனால், விஷ்வ ஹிந்து பரிசத், சிவசேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் இது தொடர்பாக பாஜக மீது அதிருப்தி தெரிவிக்கும் நிலையில், அயோத்தியின் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையை உத்திரபிரதேச பாஜக அரசு நிறுவ இருக்கிறது. அயோத்தியில் ராமர்கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இந்துக்களை அமைதியாக்கவும், அவர்களை தேர்தலுக்கு பயன்படுத்தும் நோக்கிலும் இந்த சிலை நிறுவப்பட இருக்கிறது. அயோத்தி நகராட்சி மேயராக இருக்கும் உபாத்யாய் “தீபாவளி தினத்தன்று ராமர் சிலை நிறுவுவதற்கான திட்டத்தை முதல்வர் யோகி. ஆதித்யநாத் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
சிலை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்துள்ள அயோத்தி நகராட்சி அதில் மண் பரிசோதனையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான சிலை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் 151 அடி உயரத்தில் உத்திரபிரதேசத்தில் ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படி பிரமாண்ட சிலைகளை நிறுவும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*