ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். அதற்காக தேவைப்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.

நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்,நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இந்துத்துவ அமைப்புகள் ராமர்கோவில் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. பாஜக முதல்வர்களும் இது பற்றி அடிக்கடி பேசி வரும் நிலையில், வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள மீண்டும் ராமர்கோவில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாநாடு மராட்டிய மாநிலத்தில் நடந்தது. அதி பேசிய பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி பேசுகையில்:-
“நாங்கள் தீர்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். தீபாவளிக்கு முன்னதாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டத்தை ராமர்கோவிலுக்காக நடத்துவோம். வழக்கு நிலுவையில் உள்ளதால் எங்களுக்கு தடை உள்ளது. அயோத்தி விவகாரத்தில் அரசுக்கு நாங்கள் அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. நாங்கள் சட்டம், அரசியல் அமைப்பை மதிக்கிறோம். உச்சநீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அமித்ஷா வுடன் எங்கள் தலைவர் மோகன் பகவத் சந்திப்பின் போது ராமர்கோவில் விவகாரம் பற்றி பேசினார்கள்.”
தேர்தல் நெருங்குவதை ஒட்டி ராமர்கோவில் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.
#Ramar_Temple #Ram_Temple #Ayodya

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*