வள்ளியூர் மெர்சி கொலை-நாம் பேச தடையாக சாதி இருக்கிறதா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!

மைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!

கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!

சாதியை மீறி திருமணம் செய்கிறவர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், சமூகத்தில் அனைத்து தரப்பு பெண்களுக்குமே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டஜன் கணக்கில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் வள்ளியூரில் மெர்சி என்ற இளம் பெண் இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25). இன்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளான். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில் மெர்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்கள் விரும்பினால் ஒரு பெண் அந்த ஆணை காதலித்து விட வேண்டும்.முன்னர் எல்லாம் காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆண்கள் ஆசிட் வீசுவார்கள். இப்போது கொலைதான். அதாவது காதலிக்கும் பெண் தனக்கு வேண்டும் இல்லை என்றால் இந்த பூமியில் வாழும் வாய்ப்பே அவர்களுக்கு மறுக்கப்படும் என்பதுதான் இந்த தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு வழங்கியிருக்கும் செய்தி.
ஜாதிய ஒடுக்குமுறைகளோ, ஆணவப்படுகொலைகளோ நிகழும் போதும் தங்களது காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்திக் கொண்டவர்கள் தற்போது மெர்சி படுகொலை சம்பவம் நிகழ்ந்ததும் இதே தலித் பெண்ணாக இருந்தால் எல்லோரும் கண்டனங்களும் ஊடக செய்திகளும் என பல தரப்பின் எதிரப்புகளும் தெரிவிப்பதாக கூறி தங்களது ஜாதிய துவேஷத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

மெர்சி என்ற ஒரு பெண் தான் நேசித்த நபரிடம் ஏற்பட்ட முரண் காரனமாக விலகி சென்று எப்போதும் போல தனது இயல்பான வாழ்ககையை வாழ தொடங்கி இருக்கிறார். தன்னுடைய காதலியின் நிராகரிப்பை ஏற்க மனமில்லாமல் காதலன் மெர்சியை படுகொலை செய்துள்ளார். இது பெண் என்பவள் புனிதமானவள் மற்றும் ஆண்களுக்கே உரிய சொத்து என்று உருவாக்கப்பட்ட கலாச்சார பிம்பத்தால் நிகழ்ந்த வக்கிரமான ஆணாதிக்கத்தின் மூலமாக நிகழ்ந்த படுகொலை சம்பவம், இது போன்ற சம்பவங்களை நிச்சயமாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நடக்காதவாறு சூழலை ஏற்படுத்த வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாகவே கருகிறேன்.

தலித் பெண் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு பல சமுகநீதி மற்றும் முற்போக்கு ஆதரவு சக்திகளும் ஊடக விவாதங்களும் நடைபெறும் என்றும் இதே தலித்தல்லாதவர்களுக்கு நிகழ்ந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை என ஜாதிய படுகொலைகள் நிகழும் போது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி கொண்டவர்களும், வெளிநாடு சென்று தலைமறைவான இலுமினாட்டிகளும் மெர்சி படுகொலைக்கு நீதி கேட்பதல்ல நோக்கம், மெர்சி படுகொலையை ஒரு காரணமாக வைத்து ஜாதிய வன்கொடுமைகளை எதிர்த்து குரல் எழுப்புபவர்களை ஜாதிய அடையாளம் கொடுத்து கொச்சைப்படுத்துவதோடு தாங்கள் நிகழ்த்து ஜாதிய ஒடுக்குதலை நியாயப்படுத்த நிணைக்கிறார்கள்.

தலித்துகள் மெர்சிக்காக குரல் எழுப்புவார்களா என்று கேள்வி எழுப்புபவர்கள் தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த படுகொலைகளை ஏதேனும் ஊடகங்கள் விவாதப் பொருளாக விவாதித்துள்ளது என்று உறுதிப்படுத்த முடியுமா மற்றும் தாங்கள் ஜாதியையும் ஜாதிய ஒடுக்குமுறையை விட்டொழிக்க தயாரா ?

murugan kanna பதிவு

#வள்ளியூர்_பெண்_கொலை #மெர்சி_கொலை #Mercy_Murder #Valliyur_Murder

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*