“வழக்கை வாபஸ் வாங்கு” பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்திற்கு மிரட்டல்!

தருமபுரி மாணவி சௌம்யா சதீஷ்,ரமேஷ் என்ற கொடிய மிருகங்களால் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மாதவிடாய் நேரத்தில் திறந்தவெளி கழிப்பிடத்திற்குச் சென்ற சௌம்யாவை தூக்கிச் சென்று கூட்டுப்பலியால் பலாத்காரம் செய்ததில் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயம் அவரது மரணத்திற்கு காரணமானது. இந்த வழக்கில் தருமபுரி கோட்டப்பட்டி காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ரமேஷின் குடும்பத்தினருக்கும் நெருக்கமாக தொடர்பு இருந்துள்ளது. ரமேஷ் குடும்பம் டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகும், போலி மது பாட்டில்களை ஆந்திராவில் இருந்து வாங்கிவந்து விற்பனை செய்வதாகவும் இது கோட்டப்பட்டி காவல்துறைக்கு தெரிந்தே நடந்திருப்பதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இப்போது பாதிக்கப்பட்ட சௌம்யா குடும்பத்தினரை சதீஷ், ரமேஷ் குடும்பத்தினரும் போலீசாரும் மிரட்டுவதாக சௌம்யாவின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது பற்றி மாணவியின் அண்ணன் முனீஸ்வரன் கூறும் போது;-
“எங்கள் குடும்பத்தை சதீஷ், ரமேஷ் குடும்பத்தினர் அடிக்கடி மிரட்டுகிறார்கள். இரவில் அடியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள். நீ எப்படி வழக்கை நடத்துவாய் என்று பார்ப்போம். ஒழுங்காக வழக்கை வாபஸ் வாங்கு என்று மிரட்டுகிறார்கள். கைதான சதீஷ்குமாரின் தாயார் நேரில் வந்து என் குடும்பத்தை மிரட்டினார். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் என் மகனை ஜாமீனில் எடுத்து விடுவேன். என்று மிரட்டுகிறார். போலீசாரும் சோதனை என்ற பெயரில் அடிக்கடி வீட்டிற்குள் நுழைந்து தொந்தரவு செய்கிறார்கள்” என்றார். இந்த வழக்கில் ரமேஷ் என்ற கொடிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது குடும்பத்திற்கு போலீஸ் மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை ஒட்டு மொத்தமாக தருமபுரி போலீசாரிடம் இருந்து எடுத்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சௌம்யாவுக்கு நீதி கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*