ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

நிர்மலா தேவி வாக்குமூலமும் ரகசிய விசாரணையும்?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ம.நாடராசனின் நிலை!

பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் எதிர்க்கட்சிகளைத் திரட்டும் பணியை துவங்கியுள்ள சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய தெலுங்குதேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார். இந்திய அரசியலில் திருப்புமுனையான சந்திப்பு என அரசியல் பார்வையாளர்களால் இது பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஆகியோரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு ராகுல்காந்தியையும் சந்தித்திருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபுநாயுடு:-

“பாஜகவை வீழ்த்துவதே எங்களின் நோக்கம். அதற்கான சந்திப்பாகத்தான் இது நடந்தது. பாஜகவுக்கு எதிராக கட்சிகளை இணைத்து பொது தளத்தை உருவாக்க இருக்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைய வேண்டும், எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடமும் வலியுறுத்த உள்ளேன்” என்றார் சந்திரபாபு நாயுடு.

#DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*