ஸ்டெர்லைட் 13 பேரை கொலை செய்தவர்கள் மீது வழிப்பறி வழக்காம் -நாடமாடுகிறதா சிபிஐ?

வள்ளியூர் மெர்சி கொலை-நாம் பேச தடையாக சாதி இருக்கிறதா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்த போலீசார் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகளை மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாகிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத சிபிஐ ஏதோ பிக்பாக்கெட்டுகள் மீது வழக்குத் தொடர்வது போல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்து அது துப்பாக்கிச்சூட்டில் முடிந்த நிலையில் தற்காலிகமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஆனால், மத்தியில் ஆளும் மோடியின் தயவில் மைனாரிட்டி அரசை மோடியின் பொம்மை அரசாக நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் தடுமாற்றத்துடன் நடந்து கொண்டது. ஆலையைத் திறக்க மத்திய அரசு பல வழிகளை வேதாந்தா நிறுவனத்திற்காக கையாண்டது.
ஆலையை மீண்டும் திறக்க பசுமைத்தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையிட்டது. அந்த மனுவை விசாரித்த பசுமைத்தீர்ப்பாயம் ஆலை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுமை அமைத்தது. இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்னார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த குழு அளித்துள்ள அறிக்கையில், தமிழக அரசு ஆலையை மூடுவதாக அறிவித்த நிகழ்வு நிரந்தரமானது அல்ல, வேதாந்தா நிறுவனத்தின் கருத்தைக் கேட்காமலேயே ஆலையை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று இந்த குழு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனம் ஆலையை திறக்கலாம்.மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மொத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான இறுதி வேலைகள் வேதாந்தாவுக்கு வசதியாக உருவாக்கப்படு வருகிறது. இது மக்களிடம் பெரும் அதிருப்தியை தமிழக அரசு மீது உருவாக்க துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட குடும்பங்களை சமாதானப்படுத்தும் நோக்கோடு 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. 13 பேரை கொலை செய்த போலீசார் மீது கூட்டுச்சதி, வழிப்பறி, கொள்ளை, கொலை வெறித்தாக்குதல். என பல பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளது. இம்மாதிரி பிரிவுகள் பிக்பாக்கெட், வழிப்பறி திருடர்கள் மீது போடப்படும் வழக்குகள் இதே வழக்குகளை 13 பேரை கொலை செய்தவர்கள் மீது போட்டிருப்பது சிபிஐ மீது மக்களுக்கு சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.
தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள் யாருமே ஸ்டெர்லைட் குறித்து இப்போது பேசுவதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவுக்கு தமிழக அரசும் சம்மதித்து விட்டது போன்ற எண்ணம் மக்களிடம் உருவாகி உள்ளது.
#ஸ்டெர்லைட் #Sterlite #Sterlite_Murders #தூத்துக்குடி_கொலைகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!

மைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!

கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*