“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

பாசிச பாஜக அரசுக்கு எதிராக பெரம்பலூர் குன்னம் பகுதியில் திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது அதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:-
“மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசையும், மாநிலத்தில் ஆளும் ஊழல் ஆட்சியையும் அப்புறப்படுத்த பெரும்பலூரில் இருந்து துவங்கியிருக்கிறேன். பாசிச விலங்குகளையும், ஊழலையும் வீழ்த்த பெரும்பலூர், அரியலூரை தேர்வு செய்திருக்கிறோம். பெரும்பலூர், அரியலூர் மாவட்டக்கழகங்கள் இணைந்து எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த கண்டனக்கூட்டத்தை நான் சாதரணமாக நினைக்கவில்லை. மழை மிரட்டிக் கொண்டிருந்தாலும் திரண்டிருக்கும் இந்த கூட்டத்தைப் பார்த்தால் விரைவில் பாசிச பாஜக ஆட்சியும், ஊழல் ஆட்சியையும் மக்கள் விரட்டியடிக்க தயாராகி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. நான் இளைஞரணியில் இருந்த காலத்திலும் இங்கு பல முறை வந்திருக்கிறேன். பொதுக்கூட்டங்கள், பாசறைக்கூட்டங்கள், கொடியேற்றும் கூட்டங்களுக்கு என பல முறை வந்து சென்றாலும் அதை எல்லாம் மிஞ்சக் கூடிய அளவுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
என் வாழ்நாளில் மறக்க முடியாத கூட்டமாக இந்து அமைந்து விட்டது.திருச்சி செல்லும் போதெல்லாம் பெரும்பலூரை கடந்து செல்வேன். திருச்சி எப்படி திமுகவின் கோட்டையாக இருக்கிறதோ அந்த கோட்டையின் வாசலாக பெரும்பலூர் இருக்கிறது. நான் தலைவரான பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் என்னால் மறைக்க முடியாத கூட்டம் இது.
திமுகவுக்காக தியாகம் செய்தவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன். கா.சோ. கணேசனை நினைவூட்டுகிறேன். அது போல சிவசுப்பிரமணியன் அவர்களையும் நினைவூட்டுகிறேன்.
“இந்தியாவுக்கு புதிய பிரதமரை தெரிவு செய்ய நாடாளுமன்ற தேர்தல் நோக்கி காத்திருக்கிறோம்., ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தல் மட்டும் வருகிறதா அல்லது நாம் எதிர்பார்க்கும் சட்டமன்ற தேர்தலும் வருகிறதா? எதுவந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்பதை எதிர்கொள்வதற்காகவே இந்த கூட்டம். பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கான முன்னறிவிப்புதான் இந்தக் கூட்டம்.
நவம்பர் 8-ஆம் நாள் இந்திய மக்களை முட்டாளாக்கிய மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த நாள் இது. அறிவித்ததோடு புதிய புதிய விளக்கங்களை எல்லாம் கொடுத்தார். கருப்புபணம் ஒழியும், ஊழல் ஓழியும் , கள்ளநோட்டு ஒழியும், தீவிரவாதம் ஒழியும் என மோடி மஸ்தான் வித்தை என்பது போல பேசினார். இரு ஆண்டுகள் முடிந்திருக்கிறது. நான் திமுக சார்பில் கேட்கிறேன் கருப்புபணம், ஊழல், கள்ளநோட்டு இல்லையா? தீவிரவாதம் ஒழிந்து விட்டதா? என்று கேட்கிறேன்.
வெளிநாட்டில் இருக்கும் பணத்தை கொண்டு வந்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 15 லட்சம் வழங்குவேன் என்று அறிவித்தாரே. 15 லட்சம் அல்ல, பதினைந்தாயிரம் ரூபாய் அல்ல 15 ரூபாயாவது போட்டாரா? யாராவது அப்படிச் சொன்னால் நான் மன்னிப்புக் கேட்க தயராக இருக்கிறேன். கருப்புப் பணம் மீட்டதன் பட்டியல் உள்ளதா?
இந்தியாவில் பசி இருக்காது, பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்றார். ஆனால், எல்லாம் இருக்கிறது.மோடிதான் இந்தியாவில் இல்லை. வெளிநாடு வாழ் பிரதமர்தான் மோடி. பிரதமரான இந்த நான்காண்டுகளில் 84 நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி 1484 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். உங்கள் அப்பன் வீட்டு பணமா? வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகின்றீர்களே பெட்ரோல் விலை ஏறியதுதான் வளர்ச்சியா?
காங்கிரஸ் ஆட்சியில் ஜி.எஸ்.டி. ஆதார் கார்ட் வேண்டாம் என்றீர்களே ஆனால் இப்பொது கட்டாயம் ஆக்கினீர்களே. விஜய்மல்லையாவை, நிர்வ் மோடியை காப்பாற்றியதுதான் மோடியின் சாதனை.கடந்த 20 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் மோடியின் ஆட்சியில்தான் அதிகம் என்கிறது புள்ளிவிபரங்கள்.
சந்திரபாபு நாயுடு நாளை தமிழகம் வருகிறார். என்னை சந்திக்கிறார். பல்வேறு கட்சி தலைவர்கள் ஒருங்கிணைகிறார்கள் என்றால் மோடி மீதான தனிப்பட்ட பகை அல்ல. மோடி அவர்களால் இந்தியாவுக்கு ஒரு பயனும் கிடையாது. திமுகவைப் பொறுத்தவரை மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்காக ஒன்றிணைவோம். நாளை சந்திரபாபு நாயுடு வரும் போது மாநில உரிமையை எந்த நிலையிலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்வேன். மாநிலங்களை மதிக்காதவர். நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காதவர் மோடி,. உச்சநீதிமன்றத்துடன் மோதல், ரிசர்வ் வங்கியுடன் மோதல். எந்த பயமும் இல்லாமல் திருடுகிறவர்கள் எடப்பாடி பழனிசாமி . ஊழலை கண்டு பிடித்துச் சொன்னால் பயமே இல்லை. நெடுஞ்சாலை டெண்டரில் மோசடி உறவினர்களுக்கு தரக்கூடாது என்றால். தமிழகம் முழுக்க உறவினர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.

தொடர்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின்

#பெரம்பலூர்_திமுக_கூட்டம்  #பெரம்பலூர்_திமுக #பாசிச-பாஜக_ஒழிக #DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*