25 வயதில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் – ஏ.ஆர்.ரஹ்மான்!

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு 25 வயது வரை தற்கொலை எண்ணம் அவ்வப்போது வந்து போனதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறி இன்று உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் ஏ.ஆர்.ரஹமான் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார்.அப்போது,
“எனது 25 வயது வரை எனக்குள் தற்கொலை எண்ணம் உருவானது உண்டு. நம்மில் பலர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நமது சிறப்பை உணர்வதில்லை. என் தந்தையை நான் இழந்ததால் அப்படி உணர்ந்தேன். அதன் பின்னர் பல நிகழ்வுகள் நடந்தன.அவை எல்லாம் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தை இறந்து விட்டதால் நான் அதிக படங்களை ஏற்கவில்லை. 35 திரைப்படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்த போதும் இரண்டே இரண்டு படங்களை மட்டுமே நான் தெரிவு செய்தேன். இந்த எண்ணம் ஒருவிதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்? வாழ்க்கையின் சிரமமான எல்லா சூழல்களிலும் நான் தைரியமாக இருந்துள்ளேன்” என்று தன் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசினார் ரஹ்மான்.

#ARRahman #notesofadream #ஏஆர்_ரஹ்மான் #Tamil_cinema

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*