#Man_Animal_Conflict கும்பல் மன நிலை -பெண் புலியை அடித்துக் கொன்ற மக்கள்!

மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

வட மாநிலங்களில் பரவி வரும் கும்பல் மன நிலை ஒரு பெண் புலியையும் விட்டு வைக்கவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் புலிகள் காப்பகத்தினுள் புகுந்த கிராம மக்கள் ஒரு பெண் புலியைத் தாக்கிக் கொன்றுள்ளார்கள்.

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதால் அது பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் புலிகள் இயற்கை மாறுபாடு காரணமாகவும், மனிதர்கள் ஏற்படுத்தும் சீர்கேடுகளாலும் பல நேரங்களில் ஊருக்குள் புகுந்து மக்களைத் தாக்கும். காட்டை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளையும், காட்டை அபகரிப்பவர்களையும் வளர்ச்சியின் நாயகர்கள் என வர்ணிக்கும் ஊடகங்கள். காட்டில் வாழ முடியாமல் ஊருக்குள் நுழையும் புலிகளை கொலைகாரப் புலிகள் என்று சித்தரிக்கின்றன. இதே நிலைதான் யானைக்கும் யானையின் வழித்தடங்கள் அழிக்கப்படும் போது அவை ஊருக்குள் நுழைகின்றன. ஊருக்குள் நுழையும் யானைகளை வில்லன்கள் போல சித்தரிப்பது வாடிக்கை என்னும் நிலையில்,

உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தில் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக தகவல் பரவியது. இது உண்மையா பொய்யா என்பது தெரியாமல் புலி மீது கோபமடைந்த மக்கள் துத்வா புலிகள் காப்பகத்தினுள் புகுந்து 10 வயது பெண் புலி மீது டிராக்டரைக் கொண்டு ஏற்றியதோடு சாகும்வரை அதை கும்பலாகச் சேர்ந்து அடித்தே கொன்றனர்.

துத்வா புலிகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை தடுக்க வந்த காப்பகத்தின் பாதுகாவலரை தாக்கிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 10 வயது பெண் புலியை அங்கு இருந்த ஒரு ட்ராக்டரை கொண்டு ஏற்றியுள்ளனர். அதோடு விட்டுவிடாமல், அதனை கட்டையால் சாகும்வரை தாக்கி கொலை செய்துள்ளனர். புலி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த செய்தியை பதிவு செய்துள்ள பல ஊடகங்கள் புலியை மக்கள் கொன்ற செயலைக் கண்டித்துள்ளன. ஆனால், நாடு முழுக்க மாட்டுக்கறி உண்டதாகக் கூறி கும்பலாகச் சேர்ந்து தலித்துக்கள், முஸ்லீம்களை அடித்துக் கொலை செய்த வரலாறும் இதே சமகாலத்தில்தான் நடக்கிறது. குழந்தைகளைக் கடத்துகிறார்கள். என்ற பெயரிலும், முஸ்லீம்கள் என்பதாலும் இதே கும்பல் மன நிலை கொலைகள் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சமூகம் கும்பல் மனநிலை பாசிசத்திற்கு பலியாகி வருவதன் ஒரு வெளிப்பாடுதான் 10 வயது பெண் புலி அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு!

#UP #Man_Animal_Conflict #National_Parks_Yavatmal #Forest_Department
#National_Tiger_Conservation_Authority #NTCA #புலி_கொலை #பெண்_புலி


தோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்! #உடல்நலம்#skin_diseases
சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*