#olivu_divasathe_kali ‘ஒழிவுதிவசத்தே களி’ நம் இயல்பின் மீதொரு இடி!

மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

சனல்குமார் சசீதரனின் ‘ஒழிவு திவசத்தே கழி’ என்ற மலையாள திரைப்படத்தை நேற்று பார்த்தேன். ஒரு தேர்தல் வாக்குப்பதிவு விடுமுறை நாளில் நண்பர்கள் ஐந்து பேர் காட்டிற்குள் உள்ள பழைய விடுதி ஒன்றில் குடித்து கழிப்பதுதான் படம்.
ஐந்து பேரும் ஐந்து சாதிகளைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு வர்க்க, சமூகப் பின்னணியில் வளர்ந்தவர்கள். சமூக நடைமுறைகளின் மீதும் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற பார்வைகளும் உண்டு. குடிக்கும் அந்த பொழுதில் அவர்களின் குணாசம்சங்கள் வெளிப்படுகிறது. இறுதியில் ஒரு விளையாட்டின் முடிவில் அந்த ஐவரில் ஒருவர் விளையாட்டாக தூக்கிலேற்றப்படுகிறார். அஜாக்கிரதையாக, அபத்தமான அந்த விளையாட்டின் முடிவில் அந்த அய்வரில் ஒருவரான தலித் தூக்கில் தொங்கி இறந்து விடுகிறார்.ஆனால், நிச்சயம் அது கொலை அல்ல. அது ஒரு விளையாட்டு.
இவர்களுக்கு சமைத்துக் கொடுக்கும் கூலிக்காரப் பெண்ணின் மீது நாயர் நிகழ்த்தும் சகஜமான பாலியல் சீண்டலுக்கு அந்த பெண் ஆற்றும் எதிர்வினை. அங்கு வேலையாளாக இருக்கும் ஒருவர் இவர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு பிளாட் ஆவதுமாக. அனைத்துமே அவரவர் வர்க்க நிலைகளுக்கு ஏற்ப இயல்பான பாத்திரங்களாக உள்ளன.
நாம் இயல்பாக யார் மீதும் எந்த விதமான பாரட்சமற்றும் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். சாதி , மதம், வர்க்க ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், கணந்தோறும் நம் அகத்தில் படிந்துள்ள மரபுகளில் வழியே நிலைநிறுத்தப்பட்டுள்ள நம்மிலிருந்து வருண பேதமும், வர்க்க பேதமும், ஆண் திமிரும் மிக இயல்பாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சிக்கனை ருசித்துச் சாப்பிட தெரிந்த நமக்கு கோழியை அறுக்கத் தெரியாது. ஆனால், தாசன் கோழி அறுப்பதில் சிறந்தவன் என்ற எண்ணம் நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. மரத்தில் பலா பழம் இருக்கிறது. அதை சுவைக்கத் தெரிந்த நமக்கு அதை மரத்தில் ஏறி பறிக்கத் தெரியாது. காரணம் மரமேறுவது நம் மரபில் இல்லை. ஆனால், தாசன்கள் மரமேறுவதற்கென்றே மரபு ரீதியாக பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருப்போம்.
தாசன் கருப்பின் பாடல் ஒன்றை நினைத்தபடி எதிர்ப்பை பதிவு செய்யும் போது அனைவருமே அந்த அறையை விட்டு வெளியேறி விடுகிறார்கள். பின்னர் குடியின் சகஜநிலை கெட்டதற்கு நாம் தான் காரணமோ என தாசன் மன்னிப்புக் கேட்டு மீண்டும் குழுவினரோடு கலக்கிறான். குடியில் ஏற்பட்ட சிறு சண்டையில் இன்னொருவர் நான் வெளியேறுகிறேன் என்று கிளம்ப அவரை அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்து அழைத்து வருகிறார்கள். ஆனால், அதே சமாதானம் தாசனுக்குக் கிடைக்கவில்லை அதுவும் இயல்பானதே.
விளையாட்டில் நம்பூதிரி நீதிபதி ஆவதும். நாயரும், பிள்ளையும், என்ன தண்டனை என தீர்மானிப்பதும் மொத்தமாகச் சேர்ந்து தாசனை விளையாட்டாக தூக்கிலிடுவதுமாக அனைத்தும் சகஜமாகவே நடக்கிறது.

#olivu_divasathe_kali  #ஒழிவுதிவசத்தே-களி #சனல்குமார்_சசீதரனின் #SanalKumar_Sasidharan


தோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்! #உடல்நலம்#skin_diseases
சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*