#Sarkar_politics இலவச பொருட்களை நொறுக்கும் விஜய் ரசிகர்கள்!

#vijay ரசிகர்கள் இலவச பொருட்களை உடைப்பது இப்படித்தான்!

#vijay ரசிகர்கள் இலவச பொருட்களை உடைப்பது இப்படித்தான்!

Posted by Tamilarasial on Friday, November 9, 2018

சபரிமலைக்குச் செல்ல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மனு!

சபரிமலை பெண் வழிபாடு செய்தி தொகுப்பு

சர்கார் படத்தில் இலவசங்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்ற நிலையில் விஜய் ரசிகர்கள் அரசு இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கிய இலவச லேப்டாப், ஃபேன், மிக்சி போன்றவற்றை அடித்து நொறுக்கி அதை விடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இது விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது அரசு எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
பின் தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்களை அரசுகள் வழங்கி வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுவது போல சர்கார் படம் சித்தரிக்கிறது. ஆனால், உலகம் முழுக்க நலிந்த மக்களுக்காக அரசுகள் வெவ்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவிக்கின்றன. அது பல்வேறு வடிவங்களிலும் உள்ளது. அதே மேற்கத்திய பாணியிலான உதவிகளின் மூன்றாம் உலக நாட்டின் வடிவம்தான் இலவச திட்டங்கள். அவைகள் இலவச திட்டங்கள் அல்ல மக்கள் வரிப்பணத்தை மீண்டும் மக்களுக்கே கொடுக்கும் ஒரு சிந்தனை முறை.
சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களை மேலிருந்து கீழாகப் பார்க்காமல், கீழிருந்து மேலாக பார்த்தார் அறிஞர் அண்ணா. மாடியில் இருந்து குடிசையைப் பார்க்கும் பார்வைதான் இலவசங்கள் வேண்டாம் என்பது. அப்படி ஒரு பிரச்சாரத்தை சர்கார் படம் செய்கிறது. அதையொட்டி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் அரசு வழங்கிய லட்சக்கணக்கான லேப்டாப்கள், ஃபேன்கள், மிக்சிகள் விஜய் ரசிகர்களால்நொறுக்கப்பட்டுள்ளது.
சர்கார் படத்தில் வருவது போல இலவசங்களை வெறுப்பதாக காட்டிக் கொள்ள லேப்டாபை உடைத்து அதை விடியோவாகவும் எடுத்து வெளியிடும் விஜய் ரசிகர்கள் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு சில விடியோக்களில் கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள்.

#

சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு!

’மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு ‘சர்கார்’ படத்திற்கு இல்லாமல் போனது ஏன்?

’சர்கார்’ படத்தை காலி பண்ணிய பழ. கருப்பையா!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*