#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

#நிர்மலாதேவி விவகாரம் -“யாரோ சிலரை காப்பாற்றுகிறார்கள்” -பேரா. மனைவி குற்றச்சாட்டு!

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் ஆங்கிலத்தில்தான் தேர்வு என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தமிழக அரசுப்பணிகளில் சேர தமிழில் தேர்வு எழுதிய நடைமுறை இனி இல்லை என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக எழுத்தாளர் இளங்கோ கல்லாணை முகநூலில் இட்டுள்ள பதிவில்:-
“ TNPSC தேர்வின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்க்க ஆளில்லையாம். அதனால் ஆங்கிலத்தில் தான் தேர்வாம். இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எப்போது தமிழில் மொழி பெயர்க்க முடிகிறதோ அப்போது நடத்த வேண்டும். தமிழர் அல்லாதவர்களை தமிழ்நாட்டு அரசுப் பதவிகளில் அமர்த்த சதி நடக்கிறது. முன்னரே பல உரிமைகள் பறிபோயுள்ளன. ஆங்கிலத்தை சாக்காக வைத்து கிராமப்புற மக்களை அரசு பதவிகளில் அமரவிடக் கூடாது என்று சதி செய்கிறார்கள். நீதிமன்றத்தில் இந்தத் தேர்வை செல்லாததாக அறிவிக்கச் செய்ய வேண்டும்.” என்று கோரியுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெருமளவு வட மாநிலத்தவர்களைக் கொண்டு குவித்து வைத்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தமிழக அரசுப்பணி தேர்வுக்கே ஆங்கில மொழியில்தான் எழுத வேண்டும் என்பது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுகளில்தான் எடப்பாடி பழனிசாமி அரசு இத்தனை குழப்பங்களையும் செய்துள்ளது. தமிழக அரசால் நடத்தப்படும் இந்த தேர்வுகளில் கேள்விகளை தமிழில் மொழி பெயர்க்க ஆளில்லை என்று அரசு சொல்வது எத்தனை அபத்தம்.

நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் அதிகாரி, கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு சார்நிலைப்பணி அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வை நடத்துகிறது. பல ஆயிரம் பணி வாய்ப்புள்ள இந்த தேர்வை ஆங்கிலத்தில் நடத்துவதன் மூலம் தமிழகத்தில் பிறந்தவர்களின் வேலைவாய்ப்பு முன்னுரிமையை பறித்துள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு.

#தமிழ்நாடு_அரசுப்பணி #TNPSC #தமிழ்நாடு_அரசு_பணி_தேர்வாணயம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*