அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா?

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு?

அப்பாவிப்பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம்  செய்தி தொகுப்பு

தெரியாமல் தவறிழைத்த இளைஞர் இறந்தார்- தெரிந்தே தவறிழைத்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு?

பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை அரசியல் தலைவராகவும், தொழில் முறையில் மருத்துவராகவும் அறியப்படுகிறார். பொதுவாகவே இணையதளங்களில்  தமிழிசையை கிண்டல் செய்யும் பதிவுகளை ரசிப்பதோ, லைக்கிடுவதோ இல்லை காரணம் அது ஒரு பெண்ணின் மீதான மலின எண்ணமாகக் கூட இருக்கலாம். எனவே அவைகளை பொதுவில் சட்டை செய்யாமல் தமிழிசையில் அரசியல் கருத்துக்கள் என்ன என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அந்த வகையில் அவர்  இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று பலவகையிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.  சாத்தூரில் அப்பாவிப் பெண்ணுக்கு அலட்சியமாக ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகராத்தில் சீரழிந்து நிலைகுலைந்திருக்கும் தமிழக சுகாதாரத்துறையை  பாதுகாக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

//பொதுமக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஏதோ அங்கொன்றும்,இங்கோன்றும் ஏற்படும் தனிப்பட்ட சிலரது கவனக்குறைவால், அலட்சியத்தால் நடக்கும், மருத்துவ துறை சார்ந்த விபத்துகள் பூதாகரமாக சித்தரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளின் மீது  மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு சில அரசியல்வாதிகள் போட்டி போட்டுகொண்டு வீண் புரளிகளைப் பரப்ப துணைபோவது நாட்டிற்கும்,பொதுமக்களுக்கும் நல்லதல்ல.//

என்று நீண்டு செல்கிறது அந்த அறிக்கை. இந்த அறிக்கையின் இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனையில் ரத்தம் தவறுதலாக ஏற்றப்பட்டது  தனிப்பட்ட தவறு என்கிறார். முந்தைய ஆட்சியின் அவலம் என்று இந்த மோசமான செயலை சமன்செய்கிறார் அல்லது நியாயப்படுத்துகிறார்.

என்னமாதிரி சூழலில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஒன்று திமுக தலைவர் ஸ்டாலின் சாத்தூர் மருத்துவமனையில் அப்பாவிப்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  முழு அறிக்கையும் வாசிக்க…

இன்னொரு பக்கம் வரவிருக்கும் நாடாளுமன்ற  கூட்டணிக்காக பாஜக அதிமுகவை மிரட்டி வருவதாகவும், அதற்காக தமிழக நலன்களை எடப்பாடி பழனிசாமி அரசு பலியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும். மீதியிருக்கும் 20 தொகுதிகளில் அதிமுகவும், அது வேறு யாருக்கு அவர்கள் கொடுக்க விரும்புகிறார்களோ கொடுத்துக் கொள்ளலாம் என்றும் பாஜக அதிமுகவை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற ஒரு சூழலில்தான் தமிழக அரசை பாதுகாக்கும் விதமாக தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தனது கூட்டணி கட்சியை பாதுகாக்கும் விதமாகவும், ஆதரவற்ற ஆட்சிக்கு நாங்களே அத்தாரிட்டி என்பது போலவும் இந்த அறிக்கை ஒரு தோற்றத்தை  உருவாக்குகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழிசை ஒரு மருத்துவர். தானம் மூலம் பெறப்படும் ரத்தத்தில்  ஹெச்.ஐ.வி தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டியது அரசின் அடிப்படை கடமை. அதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். அதற்காகவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது.

எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தத்தை அப்பாவிப்பெண்ணுக்கு ஏற்றியதால் அவரது வாழ்க்கையே கேள்விக்குள்ளாகி உள்ளது. ரத்தம் கொடுத்த இளைஞர் தெரியாமல் செய்து விட்ட தவறுகளுக்காக விஷமருந்தி உயிரிழந்து விட்டார். ஆனால், தவறிழைத்தவர்கள் மீது மிக மென்மையான நடவடிக்கையை எடுத்து விட்டு கலைந்து செல்கிறார்கள். இப்படி கலைந்து செல்லும் விவகாரமா இது. ஒரு மருத்துவரான தமிழிசைக்கு அப்பாவிப்பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் வீரியம் தெரிய வேண்டாமா?

மருத்துவராக அல்ல, ஒரு பெண்ணாகக் கூட இதை புரிந்து கொள்ள முடியாத தமிழிசை //தனிப்பட்ட தவறு// என்கிறார். இங்குதான் தனது கல்வி, தொழில், அறம் என அத்தனையும் தொலைத்து விட்டு அரசியலுக்காக இப்படிப் பேசுகிறார்.

இது நியாயம்தானா என்பதை தமிழிசைதான் சொல்ல வேண்டும்!

#சாத்தூர்_பெண் #தமிழக_சுகாதாரத்துறை #குட்கா_விஜயபாஸ்கர் #Tamilisai #DR_Tamilisai #Tamilnadu_Health_Department #Hospital_ Sivakasi #தமிழக_சுகாதாரத்துறை #கர்ப்பிணிப்பெண்ணுக்கு_ஹெச்_ஐ_வி_ரத்தம்

பரிதாபம்..ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழந்தார்!

சாத்தூர்  பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்?

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*