அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி!

சாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

இந்த புகைப்படம் உங்களை அதிர வைக்கிறதா?

ஐந்து மாநில தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் தமிழகத்தை குறிவைத்திருக்கும் பாஜக அதிமுகவை தன் முழுக்கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. அதன் ஆரம்ப அறிகுறியாக  சிறுபான்மையினர் விழாக்கள், திராவிட அடையாளங்களில் இருந்து அதிமுக அரசை விலகியிருக்க பாஜக நிர்பந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் அதிமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்மஸ் விழா கஜா புயலை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. ஆனால், சென்னையில் திருவையாறு என்னும் கர்நாடக இசை விழா ஆண்டு தோறும் நடைபெறும். லஷ்மன் ஸ்ருதி என்ற தனியார் இசைக் குழுவினர் ஒருங்கிணைக்கும் இந்த இசை விழாவை முதன் முதலாக முதல்வர் எடப்படி பழனிசாமியே சென்று துவங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட இந்த இசை நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஜெயலலிதா கொடுக்காத முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள அதே நேரம் , கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவை அதிமுக ரத்து செய்தது. அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அது போல ஆண்டு தோறும் திமுக, அதிமுக எந்தக் கட்சி ஆண்டாலும் பெரியார் நினைவு தினமான டிசம்பர் 24-ஆம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செய்வது வாடிக்கை. ஆனால், இந்த ஆண்டு பெரியாருக்கு  மலரஞ்சலியோ, மரியாதையோ தமிழக அரசு செய்யவில்லை. தமிழக மண்ணில் பாஜக வேர்விடத்துடிக்கும் நிலையில், பெரியார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பாஜகவுக்கு எதிராக வெளிப்படுத்தி வருகிறார்கள். #Goback_modi  என்ற கேஷ்டேக் வைரலாகி  உலக அளவில் டிரெண்டிங் ஆனதும் திராவிட இயக்க, பெரியார் மீது பற்றுள்ளவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்னும் நிலையில், ஆளும் அதிமுக அரசு முழுமையாக பாஜகவுடன் ஐக்கியமாகி வருவதையே இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசை பாஜக தன் கொள்கைகளின் படி வழி நடத்தி வருகிறது என்பதையே கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ரத்து, பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தாமை போன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுவதாக அதிமுகவில் உள்ளவர்கள் கருதுகிறார்கள். அதிமுகவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அதிமுகவில் உள்ள முஸ்லீம்களும் இப்போது என்ன செய்வது என யோசித்து வருகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் நிலோபர் காபீல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தனது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையில் உள்ளார்.

#admk_with_bjp #அதிமுக_பாஜக_கூட்டு #மோடியின்_கைகளில்_இலை #Fidel_Castro #Che #பிடல்காஸ்ட்ரோ #சேகுவேரா #எடப்பாடி_பழனிசாமி #ஓ.பன்னீர்செல்வம் #நடத்துனர்_இல்லா_பேருந்து,

 

ஒபிஎஸ் தம்பியை மீண்டும் அதிமுகவில் இணைத்த பாஜக!

 “நாங்கள் ஏன் தப்பித்து ஓடினோம்”? -மனிதி பெண் விளக்கம்!

வெட்கப்பட வேண்டியவர்கள் நாம்தான் மனிதி அல்ல!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*