அய்யப்பனை வழிபடச் சென்ற தமிழ் பெண்களுக்கு என்ன நடந்தது? தொடரும் போராட்டம்!

என் மனைவி செல்வி நலங்கிள்ளியிடம் இப்போதுதான் பேசினேன். தீட்டுக்கு எதிரான பயணத்தில் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாள்.நேற்றிரவு மதுரையிலிருந்து மனிதிப் பயணம் தொடங்கியது. முன்னும் பின்னும் தமிழ்நாடு, கேரளக் காவல்துறைகள் பாதுகாப்பு கொடுத்தபடி மனிதிகள் வேனில் பயணம் செய்தனர். இன்று காலை 03.30 அளவில் பம்பை சென்றடைந்தனர்.

போகும் வழியெல்லாம் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை அவர்களை விரட்டியடித்து மனிதிகளை அழைத்துச் சென்றது. ஆனால் காவல்துறையினர் மனிதி அமைப்பினர் எவருக்கும் ஒரு சொட்டு நீரு தரவில்லை, உணவும் தரவில்லை.பம்பை ஆற்றில் குளித்து விட்டு இருமுடிக்கு டோக்கன் வாங்கி விட்டு கோயில் அர்ச்சகர்களிடம் சென்றனர் மனிதிகள். ஆனால் நாங்கள் இருமுடி கட்ட அந்த அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் யார் என மனிதிகள் சண்டையிட்டும் அர்ச்சகர்கள் கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். உடனே மனிதிகளே பூசைப் பொருட்கள் வாங்கி இருமுடி கட்டிக் கொண்டு சபரி மலை நோக்கி நகர்ந்தனர்.

கொஞ்ச தூரம் சென்றதும் இப்போது ஐயப்ப பக்தர்களே மனிதிகளைச் சூழ்ந்து கொண்டு அவர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். நீங்கள் எல்லாம் நல்ல பெண்கள்தானா எனத் தலையில் அடைத்துக் கொண்டனர்.இப்போது காவல்துறை மீண்டும் முயற்சி எடுத்து மனிதிகளை முன்னேற்றிக் கூட்டிச் செல்ல முயன்றுள்ளது. மீண்டும் எதிர்ப்பு. இப்போது எதிர்ப்பு மிகவும் தீவிரமாக இருந்தது. எனவே மனிதிகள் சிதறி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் அனைவரும் பம்பை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் Selvi Manoசமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் எனத் தெளிவாகக் கூறி விட்டார். சபரிக்கு விட முடியாது என்றால், அதனை ஏற்றுக் கொண்டு காவல்துறைதான் எழுதித் தர வேண்டுமெனக் கோரினார் செல்வி.இந்த நிலையில் மனிதிகளின் வீறார்ந்த போராட்டம் பம்பையில் தொடர்கிறது.பயணத்தின் போது என் மனைவி செல்வியின் படம் தந்துள்ளேன்.

நலங்கிள்ளி

#Sabarimalai #Sabarimalai_women_issue #Sabarimalai_verdict #Pinaroy_Vijayan #kerala_politics #manithi

கமலை கூட்டணிக்கு அழைத்த ஒரே கட்சி – தனித்து போட்டியிட முடிவு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*