உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.திவீர அரசியலில் ஈடுபட்டிருந்த விஜயகாந்தின் உடல் நிலை 2016 சட்டமன்ற தேர்தலின் போதே சீர்குலைந்தது. அவரால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை, டெப்பாசிட் கூட பெற முடியாமல் தோல்வியடைந்தார் விஜயகாந்த். இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் தனது உடல் நலக்குறைபாட்டிற்கான சிகிச்சையை பெற்றுக் கொண்ட போதிலும், அதில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. உடல் நலத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கிய நிலையில், அவருக்கு பேசும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சில மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து சென்னை திரும்பினார். மீனம்பாக்கத்தில் இருந்து சென்னை மெரினாவில் இருக்கும் கலைஞர் கருணாநிதி சமாதிக்குச் சென்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், திருப்பூரில் தேமுதிக ஒரு மாநாட்டை நடத்த விரும்பியது. கட்சியினரும் அந்த பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மீண்டும் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சையளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். திருப்பூரில் நடக்க இருக்கும் மாநாட்டை இதற்காக தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்கா சென்று வந்த பின்னர் விஜயகாந்தின் பேச்சுத்திறனும் நினைவுத்திறனும் மேம்படும் என நம்புகிறார்கள்.  உடல் நலம் தேறி வந்த பின்னர் விஜயகாந்த் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

#விஜயகாந்த் #தேமுதிக_தலைவர்_விஜயகாந்த் #Vijayakanth #DMDK_VIJAKANTH

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*