உ.பி கலவரத்தில் இந்து அமைப்புகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி!

 

பசு மாட்டின் பெயராலும், மாட்டிறைச்சியின் பெயராலும் அடிக்கடி கொலைகள், கலவரங்கள் நடைபெறும் மாநிலங்களுள் ஒன்றாக உத்திரபிரதேசம் உள்ளது. பாஜக ஆளும்  மாநிலங்களில் இது போன்ற வன்முறைகள் தொடர் நிகழ்வாக இருந்தாலும், உத்தரபிரதேச மாநிலங்களில் இந்த கலவரங்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி நடந்து வருகிறது. காரணம் அங்கு ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்  இது போன்ற வன்முறைக் கும்பலகளை உசுப்பேற்றும்  விதமாக பேசி வருவதுதான் இந்த குழுக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையி, உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் அருகில்  ஒரு கிராமத்தில் வயல்வெளியில், பசு மாட்டிறைச்சியும், கன்றுக்குட்டியின் உடல் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே ஆத்திரம் அடைந்த வலதுசாரி இந்து அமைப்புகள் கன்றுக்குட்டியின் உடலை டிராக்டரில் ஏற்றுக் கொண்டு புலந்த்சாகர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசார் மீது இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. புறக்காவல்  நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங்கை இந்த கும்பல் கல்லால் தாக்கியே கொன்றது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமித் என்ற 20 வயது இளைஞரும் உயிரிழந்தார்.இந்த கலவரம் தொடர்பாக சுமார் 60 பேர் மீது வழக்குப் பதிந்தாலும், இந்த கலவரம் யாருக்கு எதிராக திட்டமிடப்பட்டது. ஏன் ஏற்பட்டது. போலீசாரை கலவர கும்பல் ஏன் கொலை செய்தது என்பது உள்ளிட்ட பல நிகழ்வுகள் மர்மமாகவே உள்ளது.

#modi #Ragulgandhi #yogi_adithyanath #utharpradesh_vioalance #மாட்டிறைச்சி_அரசியல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*