ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வலுவான கூட்டணியை வைத்தால் மட்டுமே பாஜகவை அப்புறப்படுத்த முடியும் என்ற செய்தியை ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தகவலாகச் சொல்லியிருக்கிறது.ராஜஸ்தான், மத்தியபிரதேசம்,சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோராம் என ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த முடிவுகளின் படி பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. அதே  நேரம் காங்கிரஸ் கட்சி பிரமாண்டமான வெற்றியை பெற்று விடவில்லை, மிசோராமிலும், தெலங்கானாவிலும் மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி ஆட்சியைப் பிடிக்கின்றது. இதன் மூலம் வரவிருக்கும் நாடாளும்னற தேர்தலில் காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற செய்தி தெளிவாக தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான்

மொத்த தொகுதிகள் -199

காங்கிரஸ் -96 தொகுதிகளில் முன்னிலை

பாஜக -78 தொகுதிகளில் முன்னிலை

#

மத்தியபிரதேசம்

மொத்த தொகுதிகள் -230

காங்கிரஸ் -111 முன்னிலை

பாஜக -109 முன்னிலை

#

தெலங்கானா

மொத்த தொகுதிகள் 119

டி.ஆர்.எஸ்- 90 களில் முன்னிலை

தெலுங்குதேசம் –காங்கிரஸ் -19 தொகுதிகளில் முன்னிலை

#

சட்டீஸ்கர்

மொத்த தொகுதிகள் -90

காங்கிரஸ் -64

பாஜக 18

#

மிசோராம்

மொத்த தொகுதிகள் -40

எம்.என்.எப்ஃ – 16

காங்கிரஸ் -8

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையளித்துள்ள அதே நேரத்தில் பாஜகவை வீழ்த்த இன்னும் கூடுதல் பலம் காங்கிரஸ் கட்சிக்கு  தேவை. பாஜக படுதோல்வியை சந்திக்கிறது என்றாலும், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் இழுபறியான நிலைதான் உருவாகும்,  ஆனால், மிசோராமிலும், தெலங்கானாவிலும் மாநிலக் கட்சிகளே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுகள்  வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய  தேவை உருவாகி இருக்கிறது.

காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ்,. தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம்,9. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம்,   லோக் தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ் கட்சி) என 14 கட்சிகள் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினாலும், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மாயாவதி புறக்கணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவை வீழ்த்துவது ஒன்றுதான் பொது நோக்கமாக நாடாளுமன்ற தேர்தலில் இருக்கும் என்றால் தேசியக் கட்சியான காங்கிரஸ் மாநிலக் கட்சிகளின் தேவையை முதலில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளைப் பெற்று வெறும் 7 தொகுதிகளில்  காங்கிரஸ் வென்று தானும் தோற்று திமுகவின்  தோல்விக்கும் முக்கிய காரணியாக இருந்தது.

#opposition_parties  #Leaders_ of_all_opposition_parties  #எதிர்க்கட்சிகள்

கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்!

மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*