கஜா புயலுக்கு 350 கோடி மத்திய நிதி – மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!

ஸ்டெர்லைட் 13 பேரை கொலை செய்தவர்கள் மீது வழிப்பறி வழக்காம் -நாடமாடுகிறதா சிபிஐ?

கஜா புயல் பாதிப்பிலிருந்து மீள சுமார் 15,000 கோடி ரூபாயை நிதியாக தமிழக அரசு கேட்ட நிலையில் வெறும் 350 கோடி ரூபாயை தமிழகத்திற்கு நிதியாக வழங்கியுள்ளது மத்திய அரசு.

கடந்த 15-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. 99% இடங்களுக்கு இன்னும் மின் விநியோகம் சீராகவில்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

நெல், தென்னை, பலா, எலுமிச்சை, வாழை என பலவிதமான பயிர்களை அழித்து பல லட்சம் ஏக்கர் பயிற்களையும் படகுகளையும் கஜா புயல் சேதமாக்கியுள்ள நிலையில், ஒட்டு மொத்த பாதிப்பில் இருந்தும் மீள 15,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. மத்திய அரசு புயல் பாதிப்புகளை பார்வையிட குழு ஒன்றையும் அனுப்பியது. இந்த குழுவினருக்கு புயல் சேதங்களை கண்காட்சி போல தமிழக அரசு வைத்திருந்தது.

மத்திய குழு அளித்த அறிக்கையை தொடர்ந்து  இடைக்கால நிவாரணங்களுக்காக மத்திய அரசு ரூபாய் 353.70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

கஜா புயல் பாதிப்பு  நிவாரண நடவடிக்கைகளில் தமிழக அரசும் , மத்திய அரசும் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தென்னை மரங்கள் வோரோடு சாய்ந்து கிடக்கிறது. இந்த மரங்களை அகற்றவே பல ஆயிரம் ரூபாய் தேவைப்படும் நிலையில், ஒரு மரத்திற்கு அரசு நிவாரணமாகப் பேசும் தொகை மிக குறைவாக இருக்கிறது. சேலம் முதல் சென்னை வரை அமைக்க இருக்கும் எட்டுவழிசாலைக்கு அகற்றப்பட இருக்கும் தென்னை மரங்களுக்கு  மரமொன்றுக்கு 30,000 ரூபாய் வரை நட்ட  ஈடு தருவதாகப் பேசும் மத்திய மாநில அரசுகள். கஜா புயல் பாதிப்பிற்கு நட்ட ஈட்டுத் தொகையை மட்டமாக கொடுக்க நினைக்கின்றன.

சேதமடைந்த படகுகளுக்கோ இதுவரை நட்ட ஈடு அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி வந்தால் தருகிறோம் என்று அரசு சொல்வதாக மீனவர்கள் கூறும் நிலையில், எப்படி இயல்பு வாழ்க்கை திரும்பும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

#கஜா_புயல் #Gaja_Cyclone #SAVE_DELTA #காவிரி_டெல்டாவை_காப்போம் #GajaCycloneRelief

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*