கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்?

நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

திமுக எம்.பியும் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் எம்.பிக்கான 2018- விருது வழங்கப்பட உள்ளது.
பிரபல செய்தி நிறுவனமான லோக் மாட் கடந்த இரு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருதுக்காக கனிமொழி தெரிவாகி உள்ளார். வருகிற 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதை வழங்க இருக்கிறார்.
விருது கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ கடந்த 10 ஆண்டுகளாக கனிமொழி சிறப்பாக பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

விருதுக்குரிய நபர்களை தெரிவு செய்வதில் 10 பேர் கொண்ட கமிட்டி செயற்பட்டது. அதில் முரளி மனோகர் ஜோஷி, டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். விருது வென்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழிக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#kanimozi #Kanimozhi_Karunanidhi #Dmk_Leader_Kanimozhi #கனிமொழி_கருணாநிதி

‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’

’நெல்’ ஜெயராமனுக்கு ஸ்டாலின் அஞ்சலி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*