கமலை கூட்டணிக்கு அழைத்த ஒரே கட்சி – தனித்து போட்டியிட முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கவுசல்யாவுக்கு எதிராக அனாமதேய தீர்மானம்!

தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அரசியல் பேசத்துவங்கிய கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார் பிக்பாஸ் பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், முன்னாள் இயக்குநர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பலரையும் நிர்வாகிகளாக அறிவித்து  அரசியல் செய்து வரும் கமல்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்தார். காரணம் ஒன்றுதான் அவரோடு யாரும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை. திமுக ஒரு தொகுதி கொடுப்பதற்கு சம்மதித்ததாக செய்திகள் வெளியாக அதை கமல் மறுத்தார். உண்மையில் திமுக யாருடனும் இன்னும் கூட்டணி பேசவில்லை. பிரதான திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சியுடனே திமுக இன்னும் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசாத நிலையில், எந்த தேர்தல்களிலும் இதுவரை போட்டியிடாத கமல்ஹாசனோடு திமுக தொகுதி பங்கீடு பேசுமா என்ற கேள்வி எழுந்தாலும் இச்செய்தி பொய் செய்தியாக பரப்பப்பட்டது.

வந்தவரைக்கும் லாபம் என்று கருதிய பாஜக கமலை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், பாஜக மீது மக்கள் கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்தால் கிடைக்கிற ஓட்டும் கிடைக்காமல் போய் விடும் என்று அந்த எண்ணத்தை கைவிட்டார். “நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் தனித்து போட்டியிடுவதே உங்களுக்கு நன்மைதான்” என்று கமல் தரப்பினர் பாஜகவுக்கு செய்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற  தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிற வேறு வழியில்லாத கமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு தன் வாக்கு வங்கியை எவ்வளவு என்பதை நிரூபித்தது போல கமலும் நிரூபிப்பார்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*