கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்!

மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்!

மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்?

நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உடனிருந்தனர். என்றாலும், கலைஞரின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆ.ராசாவை ஊழல் குற்றச்சாட்டுச் சொல்லி  திமுகவுக்கு உருவான களங்கத்தைத் துடைத்த பின்னர்,  முதன் முதலாக திமுக தலைவரே ஆ.ராசாவை டெல்லிக்கு அழைத்துச்  சென்று பல செய்திகளை காங்கிரஸ் தலைமைக்கும் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.

89-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்தியில் அமைந்த ஆட்சிகளை அமைப்பதில் கலைஞரின் பங்கு பெரும்பங்காக இருந்தது. இடையில்  ஜெயலலிதா ஆதரவளித்து பதவியேற்ற  வாஜ்பாய் ஆட்சியை பதின்மூன்றே மாதங்களில் கலைத்தார் ஜெயலலிதா. ஆனால், கருணாநிதிதான் தொடர்ந்து பல்வேறு ஆட்சிகளை உறுதியாக ஆதரித்து நீடித்த நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்தினார். அப்படி காங்கிரஸ் ஆட்சியில்  தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது பொய்யாக ஸ்பெக்டரம் வழக்கு புனையப்பட்டது.

ஆனால், பதவியை ராஜிநாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொண்டார் ஆ.ராசா. ஆனால் உலக அளவில் இந்த ஊழல் தொடர்பாக உருவாக்கப்பட்ட பொய்ப்பிரச்சாரம் காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னடைவாக இருந்தது. காங்கிரஸ் கட்சி திமுகவுக்கோ, ஆ.ராசாவுக்கோ உதவவில்லை. ஆ.ராசா தானாக போராடி நீதிமன்றத்தின் மூலம் தான் நிரபராதி என நிரூபித்து வென்றார்.

ஆ.ராசா வென்றது கலைஞருக்கு தெரியும். மீண்டும் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க கருணாநிதி ஆசைப்பட்டார். உடல் நலம் குன்றி அவர் இறந்தும் போனார். ஸ்டாலின் திமுக தலைவர் ஆன பின்னர் டெல்லிக்குச் செல்லும் மிக முக்கியமான இந்த பயணத்தில் ஆ.ராசாவையும் உடன் அழைத்துச் சென்று பல செய்திகளை காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,

“ இன்று 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கைக் கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார்.

பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்!

#திமுகதலைவர்_ஸ்டாலின் #Congress #RahulGandhi #DMK #Stalin #Sonia_Gandhi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*