கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா!

#Chennai_IIT_caste_discriminationவெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி?

தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி!

எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar_Kuthu

தமிழக அரசியலின் இழிவு எச்.ராஜா. வட இந்திய மாநிலம் ஒன்றில் பிறந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தமிழகத்தில் பரப்புவதற்காக எச்.ராஜா குடும்பம் தமிழகத்தில் குடியேறியது. மோடி 2014 -ல் பிரதமரான பின்னர் தமிழக தலைவர்களையும், குறிப்பாக தந்தை பெரியார் உள்ளிட்டோரை அடிக்கடி இழுவுபடுத்தி பேசி வரும் எச்.ராஜா. இப்போது கலைஞர் மு.கருணாநிதிக்கு சிலை திறப்பது தொடர்பாக இழிவு கருத்து ஒன்றை பதிந்துள்ளார்.

//உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை? @KanimozhiDMK @mkstalin// என்று பதிந்துள்ளார்.

கஜா புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு 15,000 கோடி ரூபாய் கேட்ட நிலையில் மோடி அரசு 350 கோடி ருபாயை ஒதுக்கியது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில் திமுக தலைவர்களுள் ஒருவரான கனிமொழி ”உயிரற்ற படேல் சிலைக்கு 3000 கோடியில் சிலை, ஆனால் புயல் பாதிப்புக்கு 350 கோடியா?” என்று கேட்டிருந்த நிலையில், இப்போது கருணாநிதி சிலையும் உயிரற்றது என்று சிலை தேவையா என்று கேட்டுள்ளார்.

படேல் சிலை 3000 கோடியில் அரசுச் செலவில் அமைக்கப்பட்டது. அறிவாலயத்தில் நிறுவப்பட இருக்கும் கலைஞர் சிலை திமுக செலவில் நிறுவப்பட இருக்கும் நிலையில் முட்டாள் தனமாக இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

அவருக்கு இணையத்தில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்!

உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*