கவுசல்யாவுக்கு எதிராக அனாமதேய தீர்மானம்!

மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்!

தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

உடுமலை சங்கரை சாதியை மீறி திருமணம் செய்து கொண்ட காரணத்தால், சங்கரை  கவுசல்யாவின் உறவினர்கள் உடுமலை பேருந்து நிலையம் அருகில் வைத்து வெட்டிப்படுகொலை செய்தார்கள். இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், கவுசல்யா சங்கரின் குடும்பத்தினரோடு தங்கியிருந்து சமூகப்பணியாற்றி வந்தார்.

திராவிடர் இயக்கங்களோடு இணைந்து பணியாற்றி வந்த கவுசல்யா ‘சங்கர் அறக்கட்டளை’ என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். இந்நிலையில், கோவையில் பறை இசை அமைப்பைச் சேர்ந்த சக்தி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா.

இந்நிலையில், அவருக்கு எதிராக சாதி வெறியர்கள்  தொடர்ந்து  இணையதளங்களிலும், பொது வெளியிலும் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இதுவரை கொலை செய்யப்பட்ட சங்கரை  தலித் என்று  இழிவு செய்து வந்த சாதி வெறியர்கள். கவுசல்யா சக்தியை திருமணம் செய்து கொண்டதும் சங்கர் புனிதர் போல பேசி வருகிறார்கள். அதாவது சங்கரின் கல்லறையின் ஈரம் காயவதற்குள் கவுசல்யா வேறு திருமணம் செய்து கொண்டார் என்று பேசுகிறார்கள்.

ஆனால், ஒரு பெண்ணாக  சங்கர்கொலை, தன் மீதான தாக்குதலில் இருந்து மீண்டெழுந்த கவுசல்யா சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் போராடி வருகிறார். இந்நிலையில், சங்கரின் ஊரான கொமரலிங்கத்தில் பொது மக்களின் பெயரால் சில சாதி அமைபுகள் பின்னணியில் இருந்து சிலர் கவுசல்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கவுசல்யா இந்த பகுதியில் இருப்பதால் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பதாகவும், அவர் தங்கியிருக்கும் சங்கரின் வீட்டிற்கு அடிக்கடி வேவ்வேறு நபர்கள் வந்து செல்கிறார்கள். அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் வந்து செல்கிறார்கள். பெண்கள் வந்து  தங்குவதால் காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது. என்று தீர்மானம் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு தீர்மானத்தை போட முடியுமா? சுதந்திர நாட்டில் யாரும் எங்கும் சென்று வரலாம் என்ற உரிமை இருக்கும் போது சில நாட்டாமைகள் கூடி இப்படி தீர்மானம் போட்டு அனாமதேய பெயர்களில் கவுசல்யாவை அச்சுறுத்துகின்றனர்.

#கவுசல்யா_சங்கர் #உடுமலை_சங்கர் #கவுசல்யா_சக்தி_திருமணம்#Kousalya #Udumalpet

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*