காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுமாம்-சொல்கிறார் அமைச்சர் விஜய்பாஸ்கர்!

A student displays his hands painted with messages as he poses during an HIV/AIDS awareness campaign to mark the International AIDS Candlelight Memorial, in Chandigarh, India, May 20, 2018. REUTERS/Ajay Verma

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஹெச்.சி.வி ரத்தம் ஏற்றப்பட்டு அப்பாவி பெண்ணை எய்ட்ஸ் நோயாளியாக மாற்றிய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் காச நோயில்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் நடத்திய காசநோய் தொடர்பான கருத்தரங்கை துவங்கி வைத்து பேசிய  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:-

“தமிழக முதல்வரால் 2017-ம் ஆண்டு காசநோய்  இல்லாத சென்னை என்ற திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளை இல்லம் தேடிச் சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன துணைத் தலைமை இயக்குனர் சவும்யா சாமிநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிக்கோல் சுகி, வீகாஷ் ஷீல் பங்கேற்று பேசினார்கள்.  #Vijayabaskar

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*