காலமானார் ’நெல் ஜெயராமன்’!

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி காலமானார்.பாரம்பரிய நெல்வகைகளைக் காப்பாற்றி வந்தவரும், இயற்கை விஞ்ஞானியுமான நெல் ஜெயராமன் புற்றுநோய் காரணமாக பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அது போல  தமிழக அமைச்சர்களும் சந்தித்து அவருக்கு வழங்க வேண்டிய உயர்சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவர் இறந்துள்ளார். நெல் ஜெயராமனின்  அயராத உழைப்பால் நூற்றுக்கணக்கான பாரம்பரிய  நெல் ரகங்கள் காப்பாற்றப்பட்டது.
#neljayaraman #Nel_Jayaraman #நெல்_ஜெயராமன் #பாரம்பரிய_விதைகள் #இயற்கை_விவசாயம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*