சாத்தூர்  பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

இந்த புகைப்படம் உங்களை அதிர வைக்கிறதா?

ஒபிஎஸ் தம்பியை மீண்டும் அதிமுகவில் இணைத்த பாஜக!

 “நாங்கள் ஏன் தப்பித்து ஓடினோம்”? -மனிதி பெண் விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்  கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்த தானம் செய்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து  கொண்டார். 24 வயதான அந்த பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாக. அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தார். அந்த பெண்ணுக்கு சாத்தூர் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள ரத்தம் என்பது தெரியவந்தது.

உயிர்க்கொல்லி நோயான ஹெச்.ஐ.வி ரத்தத்தை அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியது இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில்,  எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ள பெண்ணின் ரத்தத்தை கொடுத்துள்ள இளைஞர் மன உளைச்சலால் தனது சொந்த ஊரான கமுதி அருகில் உள்ள திருச்சிலுவை புரத்தில் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உறவுப்பெண் ஒருவருக்கு ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது அங்கு நடந்த ரத்தப்பரிசோதனையில் அவர்க்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவர உடனே அவர் உடனே அவர் சிவகாசி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாகவும் எனவே தன் ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சிவகாசி அரசு மருத்துவர்கள், ரத்ததான ஊழியர்கள் உள்ளிட்டோர் அந்த ரத்தத்தை சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்ப தவறுதலாக அந்த ரத்தம் அப்பாவி கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டுள்ளது.

வெட்கப்பட வேண்டியவர்கள் நாம்தான் மனிதி அல்ல!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*