செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

உத்தமரா உர்ஜித்படேல்?

தினகரனை முதல்வராக்குவேன் என்று சபதம் செய்த செந்தில் பலாஜி அவரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு  திமுக பக்கம் போகிறார் என்று அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.செந்தில்பாலாஜி திமுக பக்கம் சாய இருக்கும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. அதில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்.

“ஆர்.கே.நகரில் தினகரன் இருபது ரூபாய் நோட்டை காண்பித்த போதும், அவரை முதல்வராக்குவேன் என்று செந்தில்பாலாஜி கூறிய போதே நான் கூறினேன். தினகரன் கூடாரம் காலியாகும் என்று நான் சொல்லி இரண்டே வாரத்தில் நான் சொன்னது நடக்கிறது.  செந்தில்பாலாஜி திமுக சென்றால் அவருக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அவருடன் செல்கிறவர்கள் வாசல் வரை சென்று விட்டு திரும்பும் சூழல் ஏற்படும்.  அப்படி அதிமுகவுக்கு வரும் நபர்களுக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும், பாதுகாப்பும் கொடுக்கப்படும். கட்சிக்குள் போட்டிகள் இருக்கலாம், ஆனால், விசுவாசமாக இருக்க வேண்டும், ஏற்கனவே செந்தில்பாலாஜி மதிமுகவில் இருந்து திமுகவிற்குச் சென்று பின்னர் அதிமுகவுக்கு வந்து பின்னர் தினகரனிடம் சென்று இப்போது திமுக செல்கிறார்.அடுத்து அவர் எத்தனைக் கட்சிகளுக்குச் செல்வார் என்பது  நமக்கு தெரியாது. ”என்று விமர்சனம் செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

#ADMK #MRVijayabaskar #SenthilBalaji #TTVDhinakaran#SenthilBalaji #DMK #MKStalin #TTVDhinakaran #amma_makkal_munnetrakazakam #அம்மா_மக்கள்_முன்னேற்றக்கழகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*