’ஜெ’ சந்தேகம் மரணம்? -ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்!

#Petta டீசர் வெளியானது!

போராடும் ஆசிரியர்களைச் சந்தித்த ஸ்டாலின்!

அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டது. அதன் பின்னர் சசிகலா மரணத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பினார். சசிகலா ஜெயலலிதாவை கொலை செய்து விட்டது போல சசிகலாவின் எதிர்கோஷ்டியினர் பேசி வருகிறார்கள்.இன்னொருபக்கம் அதிமுக எம்.பி தம்பிதுரை  திமுகதான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்று பேசினார். தம்பிதுரையின் கருத்தை ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் மனுவாக தாக்கல் செய்வீர்களா என்று திமுக கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் எதையும் அதிமுக சொல்லவில்லை.

பிளவு பட்ட அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பும் நிலையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்தவர்கள், ரூம்பாய்ஸ், உறவினர்கள், வாட்ச்மேன், வண்டி ஓட்டியவர் என பலருக்கும் சம்மன் அனுப்பி ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஏன் தான் நாம் சிகிச்சை அளித்தோமோ என்று எண்ணும் அளவுக்கு மருத்துவர்களுக்கு சம்மன் மேல் சம்மனாக அனுப்பிக் கொண்டிருக்கிறது ஆணையம். இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவமனையும்  ஜெயலலிதாவும், அவரோடு உடனிருந்தவர்களும் சாப்பிட்ட இட்லி கணக்குகளை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தார். அவருக்கும் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இதனால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

சம்மனில் ஆஜராக பேட்டா உண்டா என்ற கேள்வி மருத்துவர்களிடையே பரவி வருகிறது.

சாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*