’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்?

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

எந்த ஒரு தலைவரின் மரணமும் இந்த அளவு காமெடி ஆனதில்லை. ஜெயலலிதாவின் மரணத்தை அத்தனை வடிவத்தோடு நகைச்சுவையாக்கி விட்டார்கள் அதிமுகவினர்.

பன்னீர் துவங்கி வைத்த தர்மயுத்தத்தின்  துவக்கம் ஜெயலலிதா மரணத்தின் மீதான சந்தேக நிழலை சசிகலாவின் பக்கம் சாத்தியது. சசிகலா தயவில் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கவிழ்த்து விட்ட பின்னர், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்த பாஜக சசிகலா, தினகரனை வழிக்கு கொண்டு வர சசிகலாவை குறி வைத்து ஆறுமுகச்சாமி விசாரணைக்கமிஷனை அமைத்தது.

ஆனால், தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவுக்கு சில வழிகாட்டும் நெறிமுறைகளை பாஜக வகுத்துக் கொடுத்துள்ளது. அது பாஜக அரசின் கொள்கைகளை எதிர்ப்பது போலவும், ஆட்சியை பாதுகாப்பது போன்றும் அமைந்துள்ளது. அதாவது யாரேனும் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பது. ஆனால், அதிமுக சார்பில் பேசும் போது பாஜக அரசின் திட்டங்களை எதிர்ப்பது போல பாசாங்கு செய்வது என்கிற இரட்டை நிலைப்பாடுதான் அது. தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன் மாற்றந்தாய் மனப்பான்மையோடு தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது என கண்டித்து பேசி விட்டு வெளிநடப்பு செய்யாமல் அவைக்குள் இருந்து பாஜகவை ஆதரித்து வாக்களித்தது.

தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் தப்பி வரும் இபிஎஸ் அரசு. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது.அதிமுக அமைச்சர்கள் இருவர் டெல்லி சென்று பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசியது. வெறும் சந்திப்பு அல்ல, அது அதிமுக, பாஜக கூட்டணி தொடர்பான பேச்சின் இறுதி அத்தியாயம், ஆனால், கஜா புயலுக்காக சந்தித்தோம் என்பதைக் காட்டா ஒரு சிறு கடுகுமணி தொகையை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

நிற்க,

சசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவுக்குள் இணைத்துத்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும். அவர்களை நாம் எவ்வளவோ மிரட்டியும் அவர்கள் வழிக்கு வரவில்லை. எனவே  அவர்களை சமாதானம் செய்து அதிமுகவுக்குள் இணைத்து தேர்தலை எதிர்கொள்வதுதான் நமக்கு நல்லது. தினகரன், சசிகலா இணைந்த அதிமுக, அத்தோடு பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம்  என போகிறது பாஜகவின் கூட்டணிக் கணக்கு.

தினகரனுடன் ஒரு சிட்டிங்க் பேசி முடித்திருக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தின் சந்தேக நிழலை தினகரன் மிகக்காட்டமாக பாஜகவிடம் சொல்ல அவர்களோ, அதிமுகவினரை அழைத்து ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என இனி சொல்ல வேண்டாம். நமக்கு பொது எதிரி திமுகதான் எனவே ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என பேசுங்கள் என்று சொல்ல. இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கிறது என மினிஸ்டர்கள் இருவரும் சிரித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என்று முதல் திரியை கொளுத்தியது  சசிகலாவின் நம்பிக்கைக்குரிய விசுவாரியான தம்பிதுரை என்பது குறிப்பிடத்தக்கது.  தினகரன் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்- பாஜக என  மீடியேட்டராக தம்பிதுரையே இப்போது செயல்படுகிறார்.  இபிஎஸ் தூதர்களாக டெல்லி சென்ற அமைச்சர்கள். தம்பிதுரையிடம் இது பற்றி பேசிய பின், அவர் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய விஷயங்களை ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரிடமும் எடுத்துச் சொல்லி அடுத்தக்கட்ட மூவ்களுக்காக காத்திருக்கிறார்கள் அதிமுகவினர்.

#Jayalalitha_dead #Apollo # #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala,

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*