டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்!

திமுக தும்மினால் கூட உடனே தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்துகின்றன. திமுக கூட்டணி  வலுப்பெறும் சூழல்  உருவானால்  தொலைக்காட்சிகள் பதட்டமடைந்து கூட்டணியை உடைக்கும் விதத்தில் விவாதிக்கின்றன. நேற்று டெல்லி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் சோனியாகாந்தி, ராகுலைச்  சந்தித்தார். இன்று தேசிய முக்கியத்துவம் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதோ, தொலைக்காட்சிகள் விவாதிக்க தலைப்புகள் கொடுத்து  கிண்டலடித்திருக்கிறார் சமூக வலைத்தள வாசி ஒருவர்,

சோனியா – ஸ்டாலின் – ராகுல் சந்திப்பை முன்னிருத்தி பத்து கேள்விகளை முன் வைக்கிறது..

1:

ராகுல் அருகில் நிற்காமல், விலகி நிற்கிறார் கனிமொழி. ஸ்டாலினுடன் மோதலா..?

2:

ஸ்டாலினுக்கு நேர் எதிரில் நிற்கிறார் ஆ.ராசா. என்ன காரணம்..?

3:

ஆ.ராசா ஏன் கருப்பு ஸ்வெட்டர் அணிந்துள்ளார்..? காங்கிரஸ் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடா.?

4:

ஸ்டாலின் ஏன் கையில்லாத ஸ்வெட்டர் அணிந்துள்ளார்..? கை சின்னத்தை அவமதிக்கிறாரா..?

5:

பொருளாளர் துரைமுருகன் அவர்களை டெல்லி அழைத்து செல்லாதது ஏன்..? துரைமுருகனை புறக்கணிக்கிறதா திமுக..?

6:

RS பாரதி அவர்களுக்கு மட்டும் ஸ்வெட்டரோ, சால்வையோ அணிய கொடுக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன..? திட்டமிட்டு குளிரில் நடுங்க வைக்கப்பட்டாரா RS பாரதி..?

புறக்கணிக்கப்படுகிறாரா RS பாரதி..?

7:

கனிமொழி மஞ்சள் வண்ண சேலை மற்றும் சால்வை அணிந்திருப்பது ஏதேனும் குறியீடா..?

8:

ஜெயலலிதா அம்மையாருக்கு பிடித்த பச்சை கலர் ஸ்வெட்டரை ராகுல் அணிந்திருப்பதற்கு என்ன காரணம்..?

ஸ்டாலினை மனதை புண்படுத்த ராகுல் செய்த செயலை திமுக தொண்டர்கள் ஏற்பார்களா..?

9:

ஸ்டாலின் அவர்களே வேட்டி அணிந்திருக்கும் போது TR.பாலு அவர்கள் பேண்ட் அணிந்து சென்றதன் நோக்கம் என்ன..?

10:

ஸ்டாலின் கைகளை ராகுல் இறுக பற்றியிருப்பது எதை காட்டுகிறது..?

கூட்டணியில் குழப்பம் வருமா..?

கருத்துரையாளர்கள் : மாலன், கோலாகல ஸ்ரீ வாசன், ரவீந்திரன் துரைசாமி, பா.லட்சுமணன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

நெறியாளர்கள்:

நியூஸ் 18 குணசேகரன்

நியூஸ் 7 விஜயன்

புதிய தலைமுறை கார்த்திகைசெல்வன்

தந்திடிவி ஹரிகரன்

 

Don Vetrio Selvini 😃

#Stalin_meets_Sonia #Stalin_in_National_Politics #தேசிய_அரசியலில்திமுக #புதியதலைமுறை #News_18_tamil #puthiyathalaimurai #TAMIL_TELEVISION_DEBATES

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*