தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

சபரிமலை தொடர்பான செய்திகள்

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கேரள அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு அமல் படுத்த பாஜக உள்ளிட்ட இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் பெரும் தடையாக இருந்து வருகிறது. பெண்கள் வழிபாட்டிற்கு எதிராக கலவர நோக்கங்களுடன் இந்த அமைப்புகள் கேரளத்தின் அமைதிச் சூழலுக்கு உலை வைத்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தியா முழுக்க உள்ள பெண்களும் தங்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்தும் கேரள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் ஏற்பாட்டை மனிதி அமைப்பு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ சரியா தவறா தேவையா தேயற்றதா என்ற விவாதங்கள் கடந்து பிற்போக்கு வலது சாரி சனாதன குழுக்கள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து அரசியாலாக்கியிருக்கும் சபரிமலை பிரச்சினையில் கேரள மக்களுடன் உரையாடல் நிகழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெய்வ விசுவாசம் உள்ள / சமூகப் பொறுப்புள்ள பெண்கள் சபரிமலை பயணம் மேற்கொள்கிறார்கள். கேரள அரசு மற்றும் முற்போக்கு பெண்கள் ஆதிவாசி பழங்குடி அரசியல் அமைப்புகளின் கரங் கோர்த்தபடி அவர்களுக்கான அரண்களாக #மனிதி அமைப்பின் தலைவர்களும் இணைந்து பயணிக்கிறார்கள்.

கேரள அரசுக்கு கடிதமெழுதி அவர்களின் பதிலைப் பெற்றதோடு கேரள / தமிழக காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கு முறைப்படி தகவல்களைத் தந்து கொண்டே தங்கள் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் வாய்க்கப்பெற்ற ஆண்களின் துணையில்லை. ஆகவே கையில் பெரிதாய் பணமுமில்லை. நெஞ்சில் உரமிருக்கும் நமக்கு ஐயப்பனிடம் ஒரு வேண்டுதலும் இல்லை. கேரள மக்களிடம் நமக்கு வேண்டுதல் உண்டு.

மலையேறுவது மட்டுமல்ல நோக்கம். ஆகவே வெற்றி தோல்வி குறித்து கவலையில்லை. அனைத்தையும் புறந்தள்ளி ஐயப்பனோடு சேர்த்து இங்கிருந்து பயணித்து வரும் பெண்களை கேரள மக்கள் வரவேற்கவும் பாதுகாக்கவும் உரையாடல் வெளியை உருவாக்கவும் வேண்டுமென்பதே நம்முடைய வேண்டுதல். அது போலவே தமிழக மக்களின் பேரன்பையும் கோருகிறார்கள் #மனிதிகள்
#வாழ்த்துவோம்!!!

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala#sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests#SabarimalaDebate #சபரிமலை_அய்யப்பன்_பாடல்#sabarimala_iyyapan_song #ஐய்யப்பன்_பாடல் #sabarimala_song

பாஜகவுக்கு பயந்து கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்த அதிமுக!

#SadistModi. என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*