தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

உத்தமரா உர்ஜித்படேல்?

நாளை திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி?

ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்!

பாஜகவின் இதயப்பகுதிகளான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்திருக்கும் பாஜக தமிழகம், கேரள மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்வதன் மூலம் மீண்டும் பிரதமராக முடியும் என நம்புகிறார் மோடி.
கேரளம்
கேரளத்தில் இந்துத்துவ அமைப்புகள் ஓரளவுக்கு செல்வாக்காக உள்ள மாநிலம் ஆனால், கேரளத்தில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும், இடது சாரிகளும், காங்கிரஸ் கட்சியினருமே தேர்தலை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். இடதுசாரிகள், காங்கிரஸ் இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சபரிமலையில் பெண்களை வழிபாடு நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நினைக்கும் இடதுசாரி அரசுக்கு பாஜக பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த சபரிமலை விவகாரம் தங்களுக்கு கேரள மாநிலத்தில் வெற்றியைக் கொடுக்கும் என பாஜக நம்புகிறது. ஆனால், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக சபரிமலை கோவிலை ஒட்டிய பந்தளம் பகுதியிலேயே சில நூறு ஓட்டுகளைத்தான் பெற முடிந்தது. ஆனாலும் சபரிமலை விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி இந்துக்களின் வாக்குகளைப் பெறலாம் என நினைக்கிறது பாஜக.
தமிழகம்
கேரள மாநிலத்தில் இருக்கும் செல்வாக்கு கூட தமிழகத்தில் பாஜகவுக்கு கிடையாது. கூட்டணிகள் இன்றி அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு வாக்குகள் சிதறினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வெற்றி பெறும் நிலைதான் பாஜகவுக்கு. ஆனால், தங்களின் பொம்மை ஆட்சியான இன்றைய எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரனையும் இணைத்து ரஜினி துணையோடு போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெல்லலாம் என நினைக்கிறது பாஜக.
வட இந்திய மாநிலங்களில் தோல்வியடைந்து வரும் மோடி- அமித்ஷா தலைமைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கடும் தலைவலி உருவாகும் என்பதால் எப்படியாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளளார். மோடி. வட இந்திய மாநிலங்கள் கைவிட்டு போகும் நிலையில் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா , கர்நாடக மாநிலங்களில் எப்படியாவது தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கும் கனவில் உள்ளார் மோடி.
அதன் முதல் குறி தமிழகம். வருகிற 14-15 தேதியில் தமிழகம், புதுச்சேரி,கேரள மாநில பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை டெல்லியில் இருந்த படியே விடியோ கான்பிரன்சிங் மூலம் நடத்த இருக்கும் மோடி. தமிழகத்தில் விரைவில் ஒரு சானலையும் உருவாக்க நினைக்கிறார். ஏற்கனவே இருக்கும் தொலைக்காட்சிகள் தங்களுக்கு ஆதரவாக இருந்த போதும் புதிதாக ஒரு சானலை துவங்கும் ஐடியாவும் அவர்களிடம் உள்ளது.

#பாஜக_தோல்வி #BJP_FAILS #MODI #தமிழக_பாஜக

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*