தாமரை எப்படி மலரும் –ஸ்டாலின் கேள்வி!

மேகதாதுவில் அணை கட்டினால் பிரதமர் மோடி தமிழகத்திற்குள் ஒரு நாளும் வர முடியாது பாஜகவை வீழ்த்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து திருச்சியில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசும் போது:-

“1957 –ல் நங்கரவரம்  விவசாயிகளுக்காக 20 நாட்கள் போராடினார் கருணாநிதி. திருச்சியில் இருந்த குளித்தலைட்யில்தான் நங்கவரம் போராட்டம் கருணாநிதியால் நடத்தப்பட்டது. உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி, நங்கவரம் பாதி என்று விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னர் குளித்தலை தொகுதியில் வென்று சட்டமன்றம் சென்றார். தன் கன்னிப்பேச்சில் நங்கவரம் விவசாயிகள் பிரச்சனையை பேசினார். கருணாநிதி கூறியது போல உழவனின் கண்ணீர் துடைக்க நடைபெறும் போராட்டம் இது. கஜா புயலில்  12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகமும், விவசாயிகளும் கண்ணீரில் தத்தளிக்கும் போது மேகதாதுவில் அணை கட்டப் போகிறோம் எனமத்திய அரசும், கர்நாடக அரசும் கூறுகிறது.

காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் தோன்றினாலும் அது தமிழகத்தில்தான் அதிகம் ஓடுகிறது. அதை வழிமறுத்து தடுத்து தமிழகத்தை வஞ்சிக்கிறது மோடி அரசு.மேகதாதுவில் ஒரு அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. இது தொடர்பாக 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று பேர் முதல்வராக இருந்தும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை பெற முடியவில்லை. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்து விட்டார்.  தன் மீதான டெண்டர் முறைகேடு ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெறும் எடப்பாடி பழனிசாமியால் மேகதாது அணை விவகாரத்தில் தடையாணை பெறமுடியவில்லை.

இதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி அரசு தான. கர்நாடக அரசு ஒரு திட்டாடதிற்கு அனுமதி கோரினால் தமிழகத்தின் கருத்தை முறையாக கேட்டிருக்க வேண்டும். மேகதாது அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பதை தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே தான் நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினோம். தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினோம். தமிழகத்திற்கு வரும் இந்த ஆபத்தை தடுக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இங்கு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

நியாயமாக இந்த போராட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கஜா புயலால் அங்கு பாதிப்பு ஏற்பட்டதால் திருச்சியில் நடத்துகிறோம்.திருச்சியிலும் டெல்டா உள்ளது. எனவேதான் இங்கு நடத்துகிறோம். தமிழகத்தை பா.ஜனதா அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தவறு. மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். மற்ற மாநிலத்தில் இதுபோன்ற பேரிடர் நடந்திருந்தால் பிரதமர் செல்லாமல் இருந்திருப்பாரா?

ஆனால் அவர் தமிழகத்திற்கு வரவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் அவர் வந்திருப்பார். இப்போதும் தமிழகத்திற்கு எதிர்பார்த்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்குமா என்பது சந்தேகம் தான். பேரிடர் மேலாண்மை குழு தலைவராக பிரதமர் இருக்கிறார். முதல்வரும் அதில் உறுப்பினராக உள்ளார். ஆனால் தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கப்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு வெறும் 3 ஆயிரம் கோடிதான வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் ஆணையம் திட்டக்கமி‌ஷன் இருந்து என்ன பயன்?

தமிழக மக்கள் எதற்காக மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்க தோன்றுகிறது. இப்படி இருந்துகொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்கிறார்கள். புற்களே முளைக்காத போது தாமரை எப்படி மலரும். எனவே இதுபோன்ற நிலையை மத்திய அரசு தொடர்ந்தால் வைகோ, வீரமணி கூறியதுபோல் தமிழகத்திற்கு நரேந்திர மோடி வரமுடியாத சூழ்நிலை ஏற்படும்.மேகதாது அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழகத்திற்கு எந்தநாளும் மோடி வர முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

#MekedatuDam #DMK #MKStalin #மேகதாது_அணை #காவிரி_நீர்_உரிமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*