தெரியாமல் தவறிழைத்த இளைஞர் இறந்தார்- தெரிந்தே தவறிழைத்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு?

பரிதாபம்..ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழந்தார்!

சாத்தூர்  பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

சாத்தூர் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்பட்ட விவகாரத்தில் தனக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாததால் ரத்த தானம் கொடுத்ததாகக் கூறிய இளைஞர் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ள  நிலையில், ரத்தங்களை பரிசோதிக்காமல் அப்பாவிப்பெண்ணுக்கு அந்த ரத்தத்தை ஏற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து  கொண்டார். 24 வயதான அந்த பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாக. அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தார். அந்த பெண்ணுக்கு சாத்தூர் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள ரத்தம் என்பது தெரியவந்தது.

உயிர்க்கொல்லி நோயான ஹெச்.ஐ.வி ரத்தத்தை அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியது இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில்,  எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ள பெண்ணின் ரத்தத்தை கொடுத்துள்ள இளைஞர் மன உளைச்சலால் தனது சொந்த ஊரான கமுதி அருகில் உள்ள திருச்சிலுவை புரத்தில் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அது போல ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணும் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உறவுப்பெண் ஒருவருக்கு ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது அங்கு நடந்த ரத்தப்பரிசோதனையில் அவர்க்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவர உடனே அவர் உடனே அவர் சிவகாசி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாகவும் எனவே தன் ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இளைஞர் கொடுத்த ரத்தத்தை எந்த பரிசோதனையும் செய்யாமல் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். அங்கு வைத்துதான் அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார். காலை 8-10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இறந்துள்ள அந்த இளைஞர் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல் ரத்தம் கொடுத்துள்ள உண்மை தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ள நாம் ரத்தம் கொடுத்துள்ளோமே என்ற குற்ற உணர்வில் எலி மருந்து விஷத்தைக் குடித்து அந்த இளைஞர் இறந்துள்ள நிலையில், தானம் பெற்ற ரத்தத்தை பரிசோதிக்காமல் அப்பாவிப் பெண்ணின் வாழ்வை சீரழித்த அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவரை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இந்தியாவே அதிர்ச்சியடையும் வகையில் அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டுள்ள நிலையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

#அமைச்சர்_விஜயபாஸ்கர் #Tamilnadu_Health_Department #Hospital_ Sivakasi #தமிழக_சுகாதாரத்துறை #கர்ப்பிணிப்பெண்ணுக்கு_ஹெச்_ஐ_வி_ரத்தம்

’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்?

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*