தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி!

எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar_Kuthu

ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்!

உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத்  திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழக மக்களையும், தூத்துக்குடி  மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.வேதாந்தாவுக்குச்  சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை  தூத்துக்குடியில் அமைந்துள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையடுத்து மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாளன்று, கடந்த மே மாதம் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி நடந்த போலீஸ் துப்பாகிச்சூட்டில் 13 பேர் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதையொட்டி ஆலையை தமிழக அரசு மூடியது.

ஆனால், செல்வாக்கில்லாத அதிமுக அரசு மோடியின் பொம்மையரசாக இருப்பதால் ஸ்டெர்லைட் விவகாரத்தில்  ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், பசுமைத்தீர்ப்பாயத்தின் இயக்குநர்  தருண் அகர்வால் தலைமையில் வந்து ஆலையை ஆய்வு செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆலை நிர்வாகப்பணிகளை துவங்கலாம் என்று பசுமைத்தீர்ப்பாயம் முதல் உத்தரவை பிறப்பித்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர் அதை ஆளும் அரசு கண்டு கொள்ளாத நிலையில்,  பசுமைத்தீர்ப்பாயம் ஆலை இயங்க அனுமதியளித்துள்ளது. மூன்று வாரங்களுக்குள் ஆலை இயங்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு பசுமைத்தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.  வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள பசுமைத்தீர்ப்பாயம் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளதோடு,ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்துள்ளது பசுமைத்தீர்ப்பாயம். ஆலையை திறப்பதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலையை தமிழக அரசுக்கு உருவாக்கியிருக்கிறது தீர்ப்பாயம்.

வேதாந்த தாமிர, எக்கு, செம்பு போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம். இந்த தனியார் நிறுவனத்திற்கு எதிராக எந்த முடிவையும் எடுக்கும் வலுவோ தைரியமோ எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. பலவீனமான மாநில அரசு மத்திய அரசு சொல்வதைக் கேட்கவும். மத்திய அரசின் உத்தரவுகளை நிறைவேற்றிக் கொடுப்பதையுமே தன் பணியாக கருதுகிறது.

மொத்தத்தில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது.

#ஸ்டெர்லைட் #Sterlite #Sterlite_Murders #தூத்துக்குடி_கொலைகள்,

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*