நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

ஸ்டாலின்

நாளை டெல்லி செல்லும் திமுக தலைவர் சோனியாகாந்தியை சந்திக்கிறார். பின்னர்,  எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க இந்திய அளவில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் திமுக இந்திய அளவில் இந்த மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் சூழல் உருவாகியிருப்பதால். தெலுங்கு தேசம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள்.

இதனுடைய தொடர்ச்சியாக ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சோனியாகாந்தியை  அவர் சந்தித்து டிசம்பர் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அடுத்து, 10-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது அதில் கலந்து கொள்ளும் ஸ்டாலின் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் அமையவிருக்கும் கூட்டணி தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஸ்டாலின் டெல்லி செல்வதால், திமுக எம்,பி கனிமொழியும் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பாக பேசிய கனிமொழி:-

“டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும்” என்றார்.

#Kanimozhi #DMK

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*