நாளை திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி?

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

முன்னாள் அதிமுக அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகியும், தினகரன் ஆதரவாளருமான செந்தில் பலாஜி திமுகவில் நாளை இணைகிறார்.பிளவு பட்ட அதிமுகவில் எழுந்த கோஷ்டி மோதல்களாலும்,  தினகரன் மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் குழுவினருடன்  பாஜக மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாலும், தினகரன் அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தவிறவும் அரசியல் எதிர்காலம் தொடர்பாகவும் கடும் மன அயர்ச்சி அடைந்துள்ள நிலையில், அரவக்குறிச்சு சட்டமன்ற உறுப்பினரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சருமான செந்தில் பலாஜி தனது ஆதரவாளர்களுடன் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுகவில் இணைய இருக்கிறார். என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி தனியார் விடுதி ஒன்றில் வைத்து திமுக பிரமுகர் அன்பில் பொய்யாமொழி சந்தித்து பேசிய நிலையில், திமுக தலைவர்களுள் ஒருவரான ஆ.ராசாவுடன் விமான நிலையம் ஒன்றில் நடந்து  செந்தில் பாலாஜியும் நடப்பது போன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செந்தில் பலாஜியுடன் அரவக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளும் கூண்டோடு திமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவிஉள்ளதால் பரபரப்பு உருவாகி இருக்கிறது.

#senthilbalaji #செந்தில்பாலாஜி #அம்மா_மக்கள்_முன்னேற்றக்கழகம் #தினகரன்_அணியில்_பிளவு #செந்தில்பாஜி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*